நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள். ” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது. இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன். “மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய்…
எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துகள்
இலக்கியம் புனிதங்களை உடைக்கலாமா? இருப்பதை மாற்றுவது (change the status quo) என்பதும் இலக்கியத்தின் நோக்கங்களில் ஒன்றுதான் என்பதால் விமர்சனமே தவறாகாது. ஆனால் இலக்கியம் என்பது கருத்து மட்டுமல்ல, மொழியும்தான். பண்பட்ட மொழியைப் புறக்கணிக்கும் எதுவும் இலக்கியமாகிவிடாது. இலக்கியம் என்பது வக்கரங்களுக்கான வடிகால் அல்ல. அது மாற்றத்திற்கான போர் வாள். மாலன் ———————– மதம், புனிதம்,…
சர்வதிகாரி ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த அதே காலப் பகுதியிலே (1940) சார்ளி சாப்ளினும் வாழ்ந்தார். ஹிட்லரைக் கண்டு முழு உலகமும் நடுங்கிய போதும் சார்ளி சாப்ளினோ (The Great Dictator) ‘சிறந்த சர்வாதிகாரி’ என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஹிட்லர் மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுபவனே கலைஞன். இவ்விதழ் அந்தக் கலைஞனுக்குச் சமர்பணம்.
‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ : தீர்ப்பு உங்கள் கையில்
கடந்த சில வாரங்களை மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை…
தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.
தயாஜியின் சிறுகதை – “கழிவழியும் பழிவாங்கும் வழிமுறையும்“ ஒரு நல்ல இலக்கியப்பிரதி. எந்த இலக்கியப்பிரதியும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதுண்டு. அதன் கலைப்பெறுமானம், கருத்தியல் என்ற இரண்டு பிரதான விசயங்களில் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் “ கருத்தியல்ரீதியாக விவாதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இதுகூட ஒன்றும் புதியதல்ல. இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் இத்தகைய வினைகளுக்கெதிரான மறுப்புகள் இருந்து…
தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறையும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் அக்கறையின்மையும்!

டேவான் பகாசா டான் புஸ்தகா (DBP) தேசிய மொழி காப்பகத்தின் கீழ் Jabatan Pengembangan Bahasa Dan Sastera எனும் தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறை 2009-ஆம் ஆண்டு நிருவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் முதன்மையான நோக்கங்களிள் ஒன்று மலேசிய நாட்டின் பல்லின மக்களிடையே தேசிய மொழியையும் தேசிய இலக்கியத்தையும் வளப்படுத்துவதோடு விரிவாக்கம் செய்வதாகும்.…
கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

*இந்தச் சிறுகதை பொதுமக்களின் / மாணவர்களின் வாசிப்புக்கு அல்ல. உளவியல் அறிந்தவர்கள் மட்டும் இக்கதையை வாசிக்கலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஜீன்ஸிலேயே சிறுநீர் கழித்திருக்கிறேன். அதன் ஈரம்தான் என்னை எழுப்பியிருக்கவேண்டும். இல்லை நான் எழுந்திருக்கவில்லை. முனகுகிறேன். என்னால் அசைய முடியவில்லை. கண்களைக் கட்டியிருக்கிறார்கள். கை கால்களும் கட்டியிருக்கிறது. என்ன இது இப்படி ஒரு வாடை. குமட்டுகிறது. இது…
மாற்றத்தை நோக்கியதே இலக்கியம்

மூலம் S.M. ஷாகீர் | மொழியாக்கம்: அ.பாண்டியன் கட்டுரையாளரைப் பற்றி: S.M. ஷாகீர் – இயற்பெயர் ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான் (Syed Mohd Zakir Syed Othman). 4.2.1969 கோத்தா பாருவில் பிறந்தவர். 1990 முதல் எழுதி வருகிறார். இதுவரை 22 இலக்கிய தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவரது ‘மெரெங்குஹ் லாங்கீட்’ என்னும்…
அவள் பெயர் அம்பிகை

நான் ஓர் இயற்கை விரும்பி என்பதால் சுற்றுலா செல்வது மட்டுமல்ல சுற்றுப்பயணம் சம்பந்தப்பட்ட இடங்களை வாசிப்பதிலும் அதீத விருப்பம் எனக்கு உண்டு. அந்த வகையில் ‘உயிர்மை’ இலக்கிய இதழில் ‘அங்கோர் வாட்’ கோயிலைப் பற்றியும் ‘போரோபுடூர்’ கோயிலைப்பற்றியும், ‘பிரம்மனன்’ கோயிலைப்பற்றியும் ஒரு முறை வாசிக்க நேர்ந்தது. அப்போதே அந்த இடங்களுக்கு சென்று வரவும் நம் வரலாற்று…
சூப்பர்மேன் மற்றும் சில சாபங்கள்

“இவரு பெரிய சூப்பர்மேனு வந்துட்டாரு காப்பாத்த…” என்று பலர் கிண்டலாகவும் கேலியாகவும் பேசிக்கேட்டிருப்பீர்கள். நாம் அறியாமலேயே நம் வார்த்தைகளுக்கு நடுவில் வந்து அமர்ந்து கொள்ளும் ஒரு கதாப்பாத்திரம்தான் இந்த “ சூப்பர்மேன்” பாத்திரம். சாகசங்களின் குறியீடாக ‘சூப்பர் மேன்’ எனும் பெயர் மாறியுள்ளது. யார் இந்த சூப்பர்மேன்? 1938-இல் இரண்டு உயர்க்கல்வி மாணவர்கள் வெர்ரி சீகன்…
பப்பிகள்

நாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான்.…
என்னாச்சி?

என்னாச்சு நம்ம குழந்தைகளுக்கு! எதுவும் சொல்லமுடியவில்லை. பதின்மவயதுப் பிள்ளைகளை (teenage) வைத்திருக்கும் அனைத்துப் பெற்றோர்களின் புலம்பலும் ஒரே மாதியாகவே இருக்கின்றதே. எதில் குறை? எங்கே இந்த அவலங்கள் ஆரம்பிக்கப்பட்டன? எதனால் இவர்கள் இப்படி மாறினார்கள்? உழைப்பதற்கு அஞ்சுகிறார்கள். அவமானப்பட்டுவிடுவோமோ அல்லது காயப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகின்றார்கள். பெரியவர்களிடம் மரியாதை இல்லை. யார் என்ன சொன்னாலும் முகத்தில் அறைந்தார்போல்…
சொற்கள் அலையும் பெருநகரம் – யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

பல்வேறு கிளைச்சம்பவங்களுடன் நீண்டு விரியும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் எனது வாசிப்பு தளத்திற்குப் புதியவை. எப்போதும் மிக கவனமாக கையாளப்பட்ட சொற்ப வாக்கியங்களாலான கவிதைகளையே அதிகமான வாசித்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு யவனிகாவின் கவிதைகள் வியப்பளிக்கின்றன. தொடக்கத்தில் அதில் நுழைவதற்கான ஓர் அச்சத்தை இயல்பாகவே ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால், கவிதைக்குள் நுழைந்து விடுகிற பொழுது ஒவ்வொரு சொல்லும்…