
இலக்கியம் என்பது பிற கலை வடிவங்களைப் போன்றே படைப்பாளியின் உள கொந்தளிப்பையும் அழகியல் ஈர்ப்பையும் சாரமாக கொண்ட வெளிப்பாடாகும். ஓவியம் சிற்பம் போன்ற கலைகளுக்கு நிறமும் வடிவமும் ஊடகமாக இருப்பது போல் இலக்கியத்தின் ஊடகம் மொழியே. அவ்வகையில் ஒரு மொழியின் உச்சபச்ச திறனையும் மேன்மையையும் கொண்டு செயல்படுவது கவிதைத் துறையே. கவிதையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும்…