
பவா என்ற மனிதரை இரண்டு விதமாக அறிவேன். ஒன்று வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக. மற்றொன்று ஒரு கதைசொல்லியாக. நேரடியாக அவரைச் சந்தித்திராவிட்டாலும் யூட்யூபில் உள்ள காணொளிகள் வழியாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.சில கதைகளை வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு நிலைகளுக்கு முற்றிலும் மாறான உணர்வெழுச்சியை ஏற்படுத்த வல்லது பவாவின் கதை மொழி. உதாரணத்திற்கு அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’…