
அமர்வு இறுக்கமாக இல்லாமல் சுமுகமான நிலையிலேயே சென்றது. நண்பர்கள் எழுந்து நீர் அருந்த, கைகால்களை உதறிக்கொள்ள, கழிப்பறைக்குச் செல்ல என, தேவையான பொழுதுகளில் வெளியேறி வந்ததால் நீண்ட உரையாடல்களில் சிக்கல் இல்லாமல் மற்ற அனைத்து நேரங்களிலும் ஈடுபாட்டுடன் ஒன்றியிருக்க முடிந்தது. மூன்றாவது அமர்வும் குறித்த நேரத்தில் முடிய, அடுத்த அமர்விற்கான நேரத்தை மீண்டும் மறு உறுதிப்படுத்திக்…