
சின்னச் சின்ன மனிதக் கூடுகள் நிறைந்த காங்கிரீட் அடுக்குகள். இருபது அடுக்குகளுக்குள் நூற்றுக்கும் குறையாத பத்துக்குப் பதினைந்து கூடுகள். மனிதப் புழக்கத்திற்கும் குறைந்தபட்ச இடைவெளிக்கும் சாத்தியப்படாத நெரிசல். அது அது, அதனதன் கூட்டுக்குள் முடங்கி, நொந்து நூலாகிக் கிடக்கும் வானந்துச் சிறை அது. தரையில், மண்ணோடு கலந்து வாழும் சுகத்தை இழந்த மானுடப்பறவைகளின், சோகம் இழையும்…