
“இந்த மூணு பிள்ளைங்களுக்கும் கொஞ்சம் விபரம் தெரிஞ்சதும், கண்காணாம தொலைச்சிட்டு போயிருனும். அப்பத்தான் நிம்மதி. நமக்குன்னு ஒரு வாழ்க்கை, நம்ம வழியில்…” அடுப்பறையில் பாலோடு சேர்ந்து பொங்கிக் கொண்டிருந்தாள் பாக்கியம். கடைக்குட்டி இந்திராணி மூன்றாவது முறையாக ஓடிவந்தாள். “அப்பா எப்ப வருவாரு?” என்ற அதே கேள்வியுடன். “வருவாரு. போய் அக்காகூட விளையாடு” எனச் சொல்லி, நேற்று…