புலம்பெயர்ந்தவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகள்

“மண்ணு வளமிருக்க மகத்தான நாடிருக்க – நாங்கள் நாடு விட்டு நாடு வந்து – மறு நாட்டான் சீமையிலே மரம் வெட்டிப் பால் சுமந்து மலை வெட்டி மண் சுமந்து காடு வெட்டிக் கல்லுடைத்து கையேந்தி கூலி வாங்கி பாடுபட்ட கதைகளையும் பட்ட துன்பம் அத்தனையும் பாட்டிலே சொல்லப்போனால் பலகாலம் ஆகுமென்று எண்ணாது எண்ணி எண்ணி…

நீயின்றி அமையாது உலகு – 5

பெண்கள் மீதான ஈர்ப்பு என்பது எங்கிருந்து தொடங்கும் என யூகிக்கவே முடிவதில்லை.  தான் ஆண் என்பதும் அவள் பெண் என்பதும் புரிகின்றபோதா? அல்லது பெண் என நினைக்கும்போதே ஆணின் மனது ஈர்ப்புக்குள்ளாகிறதா என புரியவில்லை. பெண்கள் மீது ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே பெண்களுக்கும் ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். ஒருவேளை அப்படியெல்லாம் செய்யாதோ?…

விலங்குகள்

மீண்டும் நிர்வாகத்திடமிருந்து அதே மின்னஞ்சல் வந்திருந்தது. இம்முறை, பல்கலைக்கழக வளாகத்தில் திரியும் விலங்குகளுக்குத் தீனி போடக்கூடாது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் அமைந்திருந்த பெரிய நிலப்பரப்பில் விலங்குகள் திரிவது நிர்வாகத்திற்கு நெருடலாக இருந்தது. அவை ஆதியிலிருந்து அங்குதான் திரிந்து கொண்டிருந்தன. இப்போதும் அங்குதான் திரிந்து கொண்டிருக்கின்றன. பதினான்கு வருடங்கள் முன்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அது…

ஜூல்ஸுடன் ஒரு நாள் : தப்பிக்க முடியாத உண்மை

ஒரு சின்னஞ்சிறிய நாவல் மிக நீண்டநாள் வாழ்ந்துமுடித்துவிட்ட அயற்சியைக் கொடுக்கமுடிவது குறித்து இப்போதுவரை ஆச்சரியமாக இருக்கிறது.  ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றுக்கு மரணம் நிகழ்வதை எளிதாகக் கடக்க முடிகிறது. மனித அழிவுகளும் வதைகளும் நாவலில் இடம்பெறுவதைக்கூட வரலாற்றின் ஒரு பக்கமென கசப்புகளைச் சுமந்து செல்ல முடிகிறது. ஒரே ஒரு மரணத்தை நாவல் முழுவதும் நிறைப்பதென்பது…

ஆக்காட்டி

திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதை தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல்…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 3

பொதுவாய் மனைவியுடன், காதலியுடன் பேசும்போது அணுசரனையாகப் பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு கண்டபடி வாக்குறுதிகளை ஆண்கள் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அது மறந்தே போய்விடும். இந்த விஷயத்தில் மட்டும் எல்லாப் பெண்களும் அத்தனை துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பார்கள். திடீரென்று கேட்பார்கள் ‘ போன வருசம் ஜனவரி மாசம் நீ என்ன சொன்னே’. எவன் கண்டான்? நேற்றுச் சொன்னதே ஞாபகம்…

மஹாத்மன் சிறுகதைகள் : சுழற்சியில் இருந்து வெளியேறுதல்

பெருநகர வாழ்வு என்பது பெரும் பரபரப்பை தன் அடையாளமாக ஆக்கிக்கொண்டுள்ளது. காலை முதல் இரவுவரை நகர மக்கள் தங்கள் வாழ்கையைப் பரபரப்பாக ஆக்கிக் கொள்வதற்குப் பல காரணங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். நகர வாழ்வில் யாரும் யாரையும் நின்று கவனிக்க நேரமிருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையைவிட வேகமாக ஓடக்கூடிய வித்தைகளை நகரமக்கள் கற்றுவைத்திருக்கிறார்கள். ஆயினும்,…

காதுகள்

2016ஆம் வருடம், கோடைவெயில் அக்னி நட்சத்திரமாகப் பொரிந்துகொண்டிருந்த மே மாதத்தின் ஒருநாளில், மதுரை, சிம்மக்கல், தைக்கால் தெருவைச் சேர்ந்த விசுவாசியான தன் மாமாவின் வீட்டில் வைத்துதான் குமார் என்கிற ஜெபக்குமாரன் தன்னை கிறித்துவுக்குள் மரிக்கச் செய்து கொண்டான். ஆரம்பத்தில் சற்று விசுவாசமாக இருந்து பின்னாட்களில் தாமசைப்போல எல்லாவற்றுக்கும் சந்தேகம் கொள்கிறவனாகி கிறித்துவின் மீதான நம்பிக்கையை இழந்ததால்தான்…

ஃபெர்னான்டோ சொரன்டினோ சிறுகதைகள்

தலைப்பு : பீடை ஆங்கில மொழியாக்கம் : மிஸ்ஸேல் மிக்கேய் எயின்ஸ்வெர்த் நவம்பர் எட்டு என் பிறந்தநாள். முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் உரையாடி என் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதாக திட்டமிருந்தது. இது நடக்கும்போது காலை பத்து மணி இருக்கும். புளோரிடாவுக்கும் கோர்டோபாவுக்குமான மூலையில், அறுபது வயதுக்குட்பட்ட ஒருவரை நிறுத்தினேன். வலதுகையில் ஒரு பெட்டியுடன் மிக…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 2

நமக்கு முந்தைய தலைமுறையில் இரண்டுதாரங்கள் வைத்திருப்பவரை யாரும் தவறாகப் பார்க்கவில்லை. அவர்கள் நமது தெருவில்கூட இருந்திருக்கலாம். நானிருந்த தெருவில்கூட இரண்டு குடும்பங்கள் அப்படி இருந்தன. என் எத்ரித்தவீட்டுப் பெண்மணிக்கு வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு பையன் இருந்தான். அவர் வாரத்துக்கு ஒருமுறை வந்துபோவார். அவர் வரும் அன்றைக்கு வீடே அதைக் கொண்டாடும். பிள்ளைகள்…

“சுயகற்பனையும் சிந்தனையும் வாசிப்பும் மட்டுமே இலக்கியவாதிகளை உருவாக்க முடியும்” – இராம.கண்ணபிரான்

1943ல் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் பிறந்த திரு.இராம. கண்ணபிரான் தனது பத்தாவது வயதில் சிஙகப்பூரில் குடியேறியவர். ஆசிரியராக முப்பத்தியேழு ஆண்டுப்பணியோடு எழுதுவதையும் வாசிப்பதையும் தன் வாழ்க்கையின் சாரமாக்கிக்கொண்டவர்.  “இருபத்தைந்து ஆண்டுகள்” (1980), ”பீடம்” (1992) இவரது முக்கியத்தொகுப்புகள். புத்தக மேம்பாட்டு வாரியத்தின் தேசியவிருது, தென்கிழக்காசிய விருது, கலாசார விருது, தமிழவேள் விருது போன்றவற்றைப் பெற்றவர்.…