
வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவிதச் சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளை கடந்த காலத்தில் காண முயல்வதும், பழங்காலத்தின் படிமத்தைத் தற்காலத்தின்மீது பதிக்க முயல்வதும் அவ்விரு போக்குகளாகும். – ரொமீலா தாப்பர் கீழடி அகழாய்வு பற்றிய அறிமுகக் கட்டுரையினைக் கடந்த இதழில் எழுதியிருந்தேன். கீழடி அகழாய்வினை இந்திய அரசு தாமதப்படுத்துவதாகவும், புறக்கணிப்பதாகவும், உள்நோக்கத்துடன் அகழாய்வின் கண்காணிப்பாளர்…