உயிர்க்காடு -இறுதி பாகம்

திடுமென ஒலித்த ஒரு காரின் ஹார்ன் சத்தம் அவளை எழுப்பியது. ரோட்டைத் தாண்டி ஓடிய, ஒரு சிறுவிலங்கு அந்த வண்டியிலிருந்து தப்பி, அவள் இருக்கும் குகையை நோக்கிப்புகுந்து மறைந்தது. ‘இன்னும் ஏன் சில்வன் வரவில்லை என்று யோசனையுடன் ஆழ்ந்தாள் மெலிசா. இரவு பத்தரை மணி அளவில், அவளுடைய கைத்தொலைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தான் சில்வன். ‘இரவு 4…

படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் வல்லினத்தில் பிரசுரமாகும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை

தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர்.   அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…” உச்சி வெயில். எதிர் அனல் காற்று.…

வல்லினம் குறுநாவல் பட்டறை & சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம்

வல்லினம் இவ்வாண்டு குறுநாவல் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குறுநாவல் பட்டறையைத் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் வழிநடத்துவர். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் மலேசிய சிங்கை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளலாம். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் குறுநாவல் இலக்கியம் வளர வல்லினம் சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அவ்வகையில் வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டத்திற்காக இந்தப்…

சிங்கப்பூர் வாசகர் வட்ட விழா : ஓர் அனுபவம்

எம்.கே.குமார் தனது ‘5.12 PM’ சிறுகதை நூலுக்கு முன்னுரை கேட்டிருந்தார். அப்படியே அவசியம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து பேச வேண்டும் என்றார். நான் முதலில் நூல் குறித்து எழுதிவிடுகிறேன்; பின்னர் வருவது குறித்து பேசுவோம் என்றேன். என்னால் சடங்கான முன்னுரை எழுத முடியாது என்பதை அறிவேன். மலேசியாவில் எனக்கு…

‘உணவும் பண்பாட்டு மெருகேற்றலும்’

முன்னுரை மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவு. மனித நாகரிகம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்த சூழலில் உணவுப் பண்பாடும் ஓசையின்றி உடன் வளர்ந்ததை மானிடவியல் ஆய்வுமுடிவுகளின் வாயிலாக அறிகின்றோம். தமிழர்களது முற்கால வரலாற்றை ஆராயும்போது, உணவு உள்ளிட்ட அடிப்படைக்காரணிகள் குறித்தும் உடன் விவரிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு உணவிற்கான இருப்பு மனித வரலாற்றில் நீக்கமற…

ஒளியும் ஒலியும்

மின்னணு ஊடகம் மங்கள இசை இசைத்து மதுரமழை கொட்டிய காலங்களில்  உண்டான வானவில் ஒளியும் ஒலியும்; சித்ரஹாரையும் சிந்தனையில் இணைத்து மக்கள் ஊடக உலகத்திற்குத் தயாராகியிருந்த தொடக்க காலம்; வெள்ளிக்கிழமையும் ஒளியும் ஒலியும் இணைபிரியாத நண்பர்கள்; மக்களின் குறைகளைக் கேட்பதற்குக் கூடாத கூட்டங்கள் பஞ்சாயத்து டெலிவிஷன் முன் குழுமியிருந்த காலம்; தமிழ்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக் குழந்தைகளின்…

டாக்டர் மா.சண்முகசிவா சிறுகதைகள் : நவீன அழகியலின் முகம்

இலக்கிய விமர்சனம் என்பது மலேசியாவில் மிகச் சிக்கலான ஒரு விடயம். விமர்சனத்தை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் போதுமான பக்குவம் மலேசிய இலக்கியச் சூழலில் இல்லை. ஓர் எழுத்தாளனோ அல்லது வாசகனோ ஒரு படைப்பை வாசித்துவிட்டு அதை விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதுதான் இங்கே நிலவும் சூழல். ஓர் இலக்கியப் படைப்பு மீது வைக்கப்படும்…

கோ.புண்ணியவானின் சிறுகதைகள் : எதார்த்தத்தின் முகம்

மலேசிய நவீனத் தமிழ் கலை இலக்கியப் படைப்புலகம் கவிதை சிறுகதை நாவல், நாடகம், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களால் நிறைந்தது.  ஆயினும் சிறுகதை வடிவமே  இங்கே அழுத்தமான இலக்கிய நகர்ச்சியைக் காட்டுகிறது என்று துணிந்து கூறலாம். புதுக்கவிதை பலருக்கும் இலக்கியத் தூண்டல்களை உருவாக்கித் தந்தாலும் அது சிறுபிள்ளை விளையாட்டுப்போல் மெத்தனமாகப் படைக்கப்படுவதாலும் பலகீனமான சொல்லாட்சி, கருத்து…

அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்

ரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை…

நல்லிணக்கம்

இன நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் விதமாய் சிங்கப்பூரின் அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு, அன்று காலை பத்து மணியளவில் செம்பவாங்க் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. குங் சங் கூவாங் அவர்கள் வருவதாயிருந்தது. வரலாற்றுச்சிறப்பு மிக்கதாய் டேவிட் கருதியதால் அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து குளித்து முடித்து பட்டுவேட்டி சட்டையோடு…

தொழில்

வகுப்பறையில் மாணவர்கள் எனக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கும் எனக்கும் ஏற்கனவே ஓர் உடன்பாடு ஒப்பந்தமாகியிருந்தது. மாணவர்களாகட்டும் நானாகட்டும் பத்து நிமிடத்திற்குள் வகுப்பில் இருக்க வேண்டும். அடுத்த பதினோறாவது நிமிடத்தில் பாடம் ஆரம்பமாகும். ஐந்தாவது நிமிடத்தில் வகுப்பில் நுழைந்தேன். அவர்கள் முகத்தில் சின்னதாய் ஏமாற்றத்திற்கான ஓர் அறிகுறி. பாடம் தொடங்கியது. சீன மாணவர்களுக்குத் தமிழ்மொழி வேற்றுமொழிப் பாடம். எட்டு…

கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்

பத்து வருடங்களுக்கும் மேலாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கி கொண்டிருக்கிறேன் என்றுதான் பெயர். இதுவரை என்னிடம் யாரும் நூலுக்கான முன்னுரையையோ நூல் குறித்தப் பார்வையையோ அச்சாகும் முன் நூலில் பிரசுரிக்கக் கேட்டதே இல்லை. எனக்கு 24 வயது இருக்கும். நண்பர் அகிலன் அவரது ‘மீட்பு’ கவிதை தொகுப்பு வெளியீட்டில் என்னை விமர்சனம் செய்யக் கூறினர். அத்தொகுப்பில்…

திறவுகோல் 6: ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்

மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனால் எழுதப்பட்டு சுடர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். ‘ஆப்பே கடையில் நடந்த 236-ஆவது மேசை உரையாடல்’, ‘மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்’ என இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ என்ற நாவல்தான் என்னை…

வல்லினத்தின் ‘படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம்’ 2017

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி வல்லினத்துக்கு அனுப்பப்படும் சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

உயிர்க்காடு

“நான் கீழேதான் போகிறேன், எலியாஸ் என்னைப் பொதுத் தொலைபேசியிலிருந்து, அவனுக்குப் போன் போடச்சொல்லியிருக்கிறான். இரு, வந்துவிடுகிறேன், அதற்குள்,  முடிந்தால் சூசனை இங்கிருந்து அனுப்பிவிடு. அவள் இங்கு இருந்தால், நடப்பது யாவற்றையும் அவள் தெரிந்துகொண்டால், உனக்கும் எனக்கும் எல்லாவிதத்திலும் பிரச்சனைதான்” என்று எரிந்து விழுந்தான் ரானே. “அவளை விடு, அவள் அதிகாலையில்தான் நன்றாகத் தூங்குவாள். அந்த அறையின்…

வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டது! – அரு.சு.ஜீவானந்தன்

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் அரு.சு.ஜீவானந்தனை முற்போக்கு இலக்கியத்தின் முகம் எனச்சொல்லலாம். இவரின் பல சிறுகதைகள் அக்காலக்கட்டத்து வாசகர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோலவே இன்றும் சில வாசிப்புக்கு ஏற்றதாய் உள்ளது. இலக்கியச் சூழலில் தனது கருத்துகளை சமரசமின்றி வைக்கும் அரு.சு.ஜீவானந்தன் தனது சிறுகதைகளிலும் கலாச்சார மீறல்களைச் செய்துப்பார்த்தவர். சில காலமாக புனைவிலக்கிய உலகில் இருந்து…