
மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக…