
பலவித நாகங்களுக்கு நடுவில் நான் மட்டும். என் இரு கைகளையும் இறுக்கப்பிடித்த மலைப்பாம்புகள் ஆளுக்கு ஒருபக்கம் என இழுத்தன. தப்பித்து ஓடிவிட முடியாதபடி கால்களை கருநீல நாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்திருந்தன. சுற்று வளைத்துவிட்ட நாகங்களின் பளபளத்த மேனி கண்களைக் கூசியது. இருக்கும் இடைத்தைப்பற்றியோ கிடக்கும் நிலை பற்றியோ என்னால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை.…