
“அதுக்கு உங்களை மாதிரி சீதேவியப் பெத்திருக்கணும்மா. எனக்கு அதுக்கெல்லாம் கொடுப்பின இல்ல.” தங்கம் என்னைப் பார்த்துக்கொண்டே உம்மாவிடம் சொன்னபோது எனது முகத்தில் என்ன உணர்ச்சியைக் கொண்டு வருவதென்று எனக்குத் தெரியவில்லை. அவள் சொன்னது ஒரு மெல்லிய புகையைப்போல, அந்த இடமெங்கிலும் பரவியது. அந்தச் சமையலறையை அடைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதைப் போலத்தோன்றியது. சில்லறைக்காசைச் சுரண்டுவது போல…