
தமிழ் ஹைக்கூ கவிதைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? – தூய்ஷன், மலேசியா. முதலில் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஹைகுவின் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழில் பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப்…