கோயில் ஓட்டமும், கோவக்கார குருவியும்

இன்னைக்கும் மீட்டிங்கா… கடவுளே… என்னாலா பேசப்போறாங்க… பேச்சு பேச்சு பேச்சு..அவர் பேசுவார், பேசுவார், இன்னும் பேசுவார்… அப்புறம், அப்புறமும் பேசுவார் !!! பேசியதையேப் பேசுவார், பேச்சைக் குறைக்க வேண்டியதைப் பற்றியும் நிறையப் பேசுவார். நாம் பேசவே வேண்டியதில்லை… பேசவும் ஒன்றும் இருக்காது; பேசினாலும் யாரும் கேட்கப்போவதில்லை..பேசித்தான் பாருங்களேன்… அப்புறம்… நீங்கள் பேசியதை நிராகரித்தோ அல்லது ஏற்பதுபோல்…

கந்தர்வனின் ‘பூவுக்கு கீழே’

முந்தைய நாள் பேருந்து பயணத்தின்போது கண்ணில் கண்ட பூச்செடியைத் தேடி விரைகின்றான். அச்செடியை வீட்டுக்கு எடுத்து வந்து நட்டு வைத்து அதன் ஒவ்வொரு நொடி நேர வளர்ச்சியையும் கண்டு பூரிக்கின்றான். இவனை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய் மனைவி, ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சாக்கும்?’ என கேலி பேசுகின்றாள். இவனது செய்கையைக் கண்டு வியப்பவர்களுக்குப் பின்வரும் குறிப்புகள் உதவி…

ஐந்தடிக்கரனின் செய்தி

தமிழ்ப் பத்திரிகை நிருபரை ஐந்தடிக்காரன் என்று அழைப்பதில் மலாக்கா மாநில ம.இகா தலைவர் டத்தோ இரா பெருமாளுக்கு ( முன்னாள் மாண்புமிகு மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்) ஆனந்தம் தருகிறதென்றால் அவர் அப்படியே அழைப்பதில் எனக்கு வருத்தமும் கோபமும் கிடையாது. ஐந்தடிக்காரன் ( அஞ்சடிக்காரன்), கொடுக்கும் செய்தி எல்லாவற்றையும் பத்திரிகையில் எழுதி விடுவாயா? என்று ஒருமுறை அவர்…

அடுத்த முறையாவது…

ஆளும் அரசாங்கத்தின் மீது நமக்கிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த நமக்கே நமக்கென கிடைத்த ஒரு சிறந்த களம் தேர்தலாகும். நம்மைப் பகடைக் காய்களாக்கி ஆட்டமாய் ஆடிய அரசியல்வாதிகளை இந்தக் களத்தில்தான் வேரறுக்க முடியும்… நமது ஓட்டுகளை அரிவாளாகக் கொண்டு இரத்தம் சிந்தாமல் இங்குதான் வெட்டி வீழ்த்துகின்ற பணியியை செய்ய வேண்டும். மீண்டும் முளைக்க விடாமல் வேரோடு களையெடுக்க…

13-வது பொது தேர்தல் : ஒரு பார்வை

உலகின் ஏனைய நாடுகளில் நடக்கும் தேர்தலோடு மலேசியாவில் நடந்து முடிந்த 13-ஆவது பொது தேர்தலை ஒப்பிட முடியாது. சுதந்திரம் அடைந்தது முதல், 56 ஆண்டுகள் இந்நாட்டை ஒரே கட்சி ஆண்டதன் விளைவாக இறுகிவிட்ட ஜனநாயகத்தை மீட்கும் ஒரு தொடக்க போராட்டமாகவே அது வர்ணிக்கப்பட்டது. தேசிய இலக்கியவாதியும் பெர்சே தலைவருமான சமாட் சைட் சொன்னது போல எந்தக்…

சண்டை

வியர்வை வழிந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெண் வெள்ளை நிற கராத்தே உடை அணிந்து குறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது. அவளின் திடமான கரங்களும், தோளும் அவளை உறுதியுடையவளாகக் காட்டுகிறது என்றே நினைக்கின்றேன்.மேலும்,அந்தக் கராத்தே உடையில் அவள் இன்னும் கட்டுமஸ்தாகவே காட்சியளித்தாள். அந்த பெரிய உருவத்துடன் கராத்தே சண்டைப்போட பரிதாபமாக…

ரகசிய மனிதர்கள்

நாங்கள் இன்னும் நத்தை மாதிரி நகர்ந்து மேலே ஏறி கொண்டிருந்தோம். மெல்ல அடி வைத்து சென்று கொண்டிருந்த போது எங்களை தாண்டி சிறு கூட்டம் செனறது. ஒரு ஆண், ஒரு பெண், 7 வயது என அணுமானிக்க கூடிய சிறுமி, பெண்ணின் இடுப்பில் 3 வயது மதிக்கதக்க சிறுக்குழந்தை. இது தான் அந்த சின்ன குடும்பம்.…

முதுமையின் குளியலறை

இளமைக்காலங்களின் அழுக்குகளை துவைத்தெடுப்பதற்கு முதுமைக்குக் கிடைத்த “புனித நதி” குளியலறைகள்.. மீண்டும் மீண்டும் வந்துப் போகுது இந்தக் குளியலறைக்கு பகிரங்கப் படுத்தாமலேயே  கழுவி எழுக்கமுடியாத அழுக்குகளை சுமந்துகொண்டு நதியும் முதுமையும் இதுவரையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது யாரோ பேச்சைகேட்டு

மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்

மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன் இருபத்தி நான்காம் அறை நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில். புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண் அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு. மருத்துவத் தாதி என்பது சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில் கனிந்த மலர் என்பதுவா உதிர்ந்த மலர் என்பதுவா என்றறிய விரும்பிய மனதில் கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.…

கடற்கரையில் நான் நின்ற பின்னேரம்

ஒரு பின்னேரம் பாழடைந்து போனதைக் கண்டு தலைகுத்தி விழுந்தேன் கண்ணீருக்குள். என்ன வஞ்சமென்று தெரியவில்லை ஒரு காக்கையுமில்லை அந்த மாலையில் கரைந்து கரைந்து அதை மெருகேற்ற கடல் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் தளம்பிக் கொண்டிருந்தது என்முன்னால். என் முகம் பார்க்கத் திராணியற்று வெம்பியது அது. கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது எனக்கு. அது பின்னேரமாக…

பாலாவின் மனைவி :ஒரு மறைக்கப்பட்ட உண்மை…

அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும் ஆரம்பமானது. ஆனால், மரணம் அவர் சொல்ல…

13 ஆவது பொது தேர்தல் – நம் கோழைத்தனத்தை வரலாறு மன்னிக்காது

எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை ஆகையால் எனக்கு அது தொடர்பாகக் கருத்தில்லை எனச் சொல்பவர்களைக் கண்டித்தே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நம் வாழ்க்கையை, நம் நிலத்தை, நம் மூளையை ஆண்டு கொண்டிருப்பதே இந்த அரசியலாக இருக்கும்போது எப்படி தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என ஒருவர் கூற முடியும்? அரசியலில் களம் இறங்கி தனக்கொரு அடையாளத்தை உருவாக்கிக்…

மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!

ஒரு தலை ராகமாக ஊடகங்களில் செய்திகள் .உயரத்திலிருந்து கோழிக்குஞ்சு நடமாட்டத்தை கூர்மையாக கவனிக்கும் பருந்துபோல  வெளிநாடுகள் மலேசியாவை பார்த்துக் கொண்டிருகின்றன. ஜாதகக் காரர்கள், என் கணித நிபுணர்கள், கேரளா நம்பூர்தி, இந்தோனேசியா போமோ ஆகியோர்களை இரவு விருந்தோம்பலில் கவனிக்கும்  படுபிசியில் அரசியல்வாதிகள். ஹோட்டல் ரூம்பில் நடக்கும் உள்ளரங்கு விளையாட்டு பொது மைதானம் வரை பார்வைக்கு வைக்கும்…