
“நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற திரள் ஒன்றைப் பார்த்தோம். அப்போது சஹாக் சித்தி நூர்ஹாலிசாவின் சிண்டாய்லா பாடலைப் பாடிக் கொண்டிருந்தான். ‘என் தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது, கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகளை அவன் பாடும் போது எனக்கு ஒருவித எரிச்சலாக…