
உலகில் எழுதப்படுகின்ற எல்லா இலக்கியப் படைப்புகளின் நோக்கமும் அன்பை சொல்வதற்கான வார்த்தையை, வழியைத் தேடுவதுதான். கண்டடைவதுதான். அந்த வகையில் பூங்குழலி அன்பை சொல்வதற்கான சிறந்த வழியாக, மொழியாக, வடிவமாக கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு அன்பை சொல்வதற்கான சொல்லும், மொழியும், வழியும் கிடைத்ததா என்பதை “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” கவிதைத் தொகுப்பை படிக்கிற வாசகர்கள் அறிவார்கள். நிகழ்தலும்…