பேசலாம் இஷ்டம்போல்…

சில செய்கைகளில் நமக்கு அடக்க முடியாத ஆர்வம் வருவதென்பது இயற்கையான ஒன்று. அது மனித இயல்பும் கூட. உதாரணத்திற்கு ரகசியம் என்று யாராவது போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுச் சென்றார்களேயானால் – அது என்னவாக இருக்கும்.? என்கிற ஆராய்ச்சியில் சில நொடிகள் நம் மனது ஈடுபடாமல் இருக்காது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. `எனக்கு நிறைய…

மலாயாப் பல்கலைக்கழக நூலக ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் சேகரிப்புத் திட்டம் 2013 (22 – 24 நவம்பர் 2013)

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகம் தமிழ்மொழி சார்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வருகின்றது. குறிப்பாக இந்நூலகத்தில் மொழி, மொழியியல், கற்றல் கற்பித்தல், இலக்கணம், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம், சோதிடம், சமயம், பண்பாடு, கலைகள், பல்துறைச் சார்ந்த மாநாட்டு ஆய்வடங்கல்கள், தொகுப்பு நூல்கள் என எண்ணிலடங்கா தலைப்புகளில் நூல்கள் உள்ளன. இவற்றோடு…

ஸதி கவிதைகள்

அன்பினாலானது… நேசிப்பது எப்படியென்பதை அறிந்துகொண்ட பொழுதில் காற்றும் அறியாது முகிழ்த்தன வார்த்தைகள் இந்த வார்த்தைகளல்ல எனது நேசம் இந்தக் கணத்திலும் அதிகமான எனது நேசத்தினால் நிறைகிறது பிரபஞ்ச வெளி இப்பெரும் வெளியை கோர்த்திருக்கும் நம் கைகளுக்குள் அடக்கத் துடித்தோம் நிறமற்று விரிந்திருக்கும் கடலுள் அமிழ்ந்தோம் மணலில் கரையாத கடலென உணர்வுகளில் அழியாது ஒளிரும் அன்பை நாம்…

யோகி கவிதைகள்

1 வீதியில் புணர்ந்து கொண்டிருக்கும் நாயைப் பார்க்கிறாள் தந்தையின் கைவிரலைப்பற்றி சாலையை கடக்கும் சிறுமி அப்பா நாய் என்ன செய்கிறது? மௌனமான அப்பா… அதைப் பார்க்க கூடாது தலைவலி வரும் என்றார் சிறுமிக்கு தலை வலிக்க ஆரம்பித்தது நாயை திரும்பி பார்க்காமலே அவள் நாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்… 2 ஒரு கவிதைக்காக பல மாதமாக முயற்சித்து வருகிறேன்……

வல்லினம் ஜனவரி 2014 முதல் அச்சிலும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மலேசியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில கடைகளுக்கு வல்லினம் விற்பனைக்குச் செல்கிறது. அதே சமயம் புலம்பெயர்ந்த நாடுகளில் வல்லினம் அச்சு இதழ் தேவைப்படுபவர்கள் சந்தா மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விரிவான தகவல்கள் அடுத்த இதழில்…

வல்லினம் கலை இலக்கிய விழா 5

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) நிகழ்வை தொடர்ந்து செப்டம்பர்  15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 5-வது கலை இலக்கிய விழா தொடங்கியது. வல்லினத்தின் படைப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் இம்முறை கலை இலக்கிய விழாவில் பங்கு கொண்டனர். நிகழ்வின் முதல் அங்கமாக நவீன்…

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை)

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) மற்றும் 5-வது கலை இலக்கிய விழாவிற்கான வேலைகள் இம்முறை கூடுதல் உற்சாகத்தையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தந்திருந்தது. வல்லினம் குழுவின் மிக முக்கிய தொடர் நிகழ்வான இலக்கிய வகுப்போடு இம்முறை 5-வது கலை இலக்கிய விழாவும் சேர்ந்து கொண்டது கூடுதல் கனத்தைத் தந்திருந்தது. வழக்கம்போல பட்டறை…

காசியில் நான்கு நாட்கள்

காசிக்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் எப்படியும் 12 – 18 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் செலவழிந்துவிடும். விமான பயண நேரத்தை டிக்கெட் வாங்கும் சமயத்தில் கணக்கிலெடுத்து அதற்கேற்றவாரு அதிக நேரம் பயணத்தில் செலவாகதவாறு நேரத்தை இன்னும் மிச்சப்படுத்தலாம். சென்னையில் இருந்து நேரடி விமானம் என்றால் 4 மணி நேரத்திற்கும் குறைவாக காசியை…

மை ஸ்கீல் அறவாரியம் (MySkills Foundation) மற்றும் வல்லினம் ஏற்பாட்டில் மலேசியாவில் முதல் நவீன வீதி நாடகம்!

எள்ளலும், பகடியும், தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட பிரளயன், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. இவர் தமிழின் தொன்ம ஞானமும் நிகழ்வாழ்வின் மீதான கூரிய பார்வையும் ஆற்றல் மிக்க படைப்புச் செயல்பாடும் கொண்டவர். தமிழகத்தில் பல…

மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 2

பகுதி  2 கேள்வி : பெரும்பாலும் மலேசிய இலக்கியத்தைத் தமிழக அல்லது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் கவனிப்பதில்லை என்ற கூற்று உள்ளது. நீங்கள் எப்படி? – மகேந்திரன், பினாங்கு பதில் : இக்கேள்வி மிக முக்கியமானது. மலேசிய தமிழ் இலக்கியத்தின் எதிர்காலச் செயல்பாடுகளைக் குறித்து  சிந்திக்கத் தூண்டும் கேள்வி. கடந்த பத்தாண்டு காலமாகத்தான் மலேசிய இலக்கியவாதிகளின்; கட்டுரைகள், சிறுகதைகள்…

யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்

வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வாக நடந்த எழுத்தாளர் ‘யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்’ எனும் நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் வாசகர்கள் என சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.  தொடக்க அங்கமாக எழுத்தாளர் கே.பாலமுருகன் யவனிகா அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்த…

குவர்னிகா: டாக்டர் சண்முகசிவா நேர்க்காணல் குறித்து…

குவர்னிகா தொகுப்பில் உள்ள டாக்டர் சண்முகசிவாவின் “மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று” நேர்காணல் குறித்து நீங்கள் பேச வேண்டும் என நவீன் கேட்டபோது சிறு மௌனத்தை மட்டுமே என்னால் பதிலாக தர முடிந்தது. நீங்கள் அவரது நேர்காணல் குறித்து எதுவும் பேசலாம் என மேலதிகமாக நவீன் சொன்ன பிறகு பேசுவதற்கான வார்த்தைகளுக்காக…

குவர்னிகா: மலேசியக் கவிதைகள் ஒரு பார்வை

தமிழ் இலக்கியத்தின் தொன்மத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக உடனே அதன் நீண்ட நெடிய 2000 வருடக் கவிதை தொடர்பை அடையாளப்படுத்துவது தமிழ் இலக்கியச் சூழலின் கட்டாய / அபாயப் பணியாகிவிட்டது. ஆயிரம்கால பெருமையைப் பேசியே கவிதை நகர்ச்சியைச் சாகடித்துவிட்டோமோ என்றுகூட தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையிலிருந்து சமக்காலக் கவிதைகளைப் பற்றி பேசத் துவங்கும் ஒருவன் தனது விமர்சனத்தைக்…