அடித்தூர்

மேற்பற்கள் விழுந்திருந்ததால் மீசைப்பகுதி சற்றே உட்புறம் வளைந்து அடிப்பற்கள் மட்டுமே வாயைத் துருத்தியிருக்க ஆவேசமாய் முனகிக் கொண்டிருந்தார் தாத்தா. இந்த மூன்று நாட்களில் மொத்தமாக சேர்த்துவைத்தால் நான்கு வரி பேசியிருப்பார். அவ்வப்போது ஆள்காட்டி விரலையும் மோதிரவிரலையும் வாயில் அழுத்தி வைத்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தார். புகையிலைப் போடுவதை நிறுத்தியப்பின்னும் அவரது கடைவாயில் எச்சில் ஊறிக் கொண்டே…

கர்ப்பப்பை

“இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன். “இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத்…

கறை நதி

படிப்பதற்கு அமைதியான சூழலுடன் இனிமையான அயலவர்களும் கொண்ட தங்குமிடமொன்று அமையவேண்டும் என்று தேடித்திரிந்தபோது மெல்பேர்ன் நகரிலிருந்து நாற்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த வீட்டு உரிமையாளர்களின் அறிமுகம் கிடைத்தது. நன்கு உயர்ந்து படர்ந்து வளர்ந்த யூக்கலிப்டஸ் மரங்கள் தெருவெங்கும் மொய்த்து கிடக்கும் ரம்யமான பிரதேசத்தில் நான்கு அறைகள்கொண்ட அந்த இத்தாலிய முதியவர்களின் வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள்…

வெம்மை

1 ரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய…

கழுகு

“மொதல்ல அத நுப்பாட்டு!” நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன். “அங்க என்னா தேடுற… நுப்பாட்டுனு சொன்னா நுப்பாட்டு” என அழுத்தமாகக் கூறவும் படப்பிடிப்புக்குப் பொருத்தப்பட்ட விளக்கை முதலில் அணைத்தேன்.…

தெரியாதவை (சிங்கள மொழிப்பெயர்ப்புச் சிறுகதை)

சித்தாண்டி I “நாங்க திலீபவுக்கு சித்தாண்டியில கல்யாணம் முடிச்சுக் கொடுப்பமே.” “ஏனது?” “இஞ்ச பார்.  உன்னப் போலில்ல… சித்தாண்டிலதான் நல்ல வடிவான பொம்பளப்புள்ளகளக் கண்டிருக்குறன் நான்.” “அம்மா… இங்க பாருங்க… அப்பா சொல்றது கேட்குதா? சித்தாண்டித் திருவிழாக்களுக்கு மட்டும் அப்பாவை அனுப்பிட வேணாம்.” அப்பா திண்ணையில் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்கு இடிக்கும்போதுதான் இவ்வாறு என்னைக் கிண்டல்…

எம். பி. குடு குடு (மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை )

எம். பி. குடுகுடு மூன்று தடவை கொட்டாவி விட்டுக் கொண்டே ஆக்ரோஷமாக நெளிந்தார். அவரது முரட்டு கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி கொட்டாவி விட்டபோது, காற்றில் மெதுவாக அசைந்த தொலைபேசி கம்பிகளில் உல்லாசமாக குதித்துக்கொண்டிருந்த சில சிட்டுக்குருவிகள் பயந்தன. அந்தப் பறவைகள், அப்பாராளுமன்ற உறுப்பினர்  தங்கியிருந்த விடுதிக்கு எதிரில் உள்ள விடுதியின் கூரைக்கு விருட்டென பறப்பதைப்…

இன்றில் நிலைக்காதவை

சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவின் இரண்டாம் நாளில் நாங்கள் சென்ற வாகனம்   பழுதாகி  நின்று விட்டது. இருமருங்கும் மரங்கள் அடர்ந்திருந்த ஆளற்ற சாலையில் எங்களது சில மல்லுக்கட்டல்களுக்குப் பின்னும் அதன் பிடிவாதம் தளரவில்லை. சோர்ந்து போன நண்பர் அப்படியே நடந்து சென்று திரும்பி மரத்தில் எழுதிக் கட்டப்பட்ட அட்டையில் உள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு வந்தார்.…

வனத்தின் குரல்

ஆதியிலிருந்து இன்றுவரை மனிதனுடைய வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையைக் கொண்டே வாழ கற்றுக் கொண்டுள்ளான். இயற்கையில் இருந்தே மனிதன் தன் அடிப்படைத் தேவைகளாகிய நிலம், காற்று, நீர், உணவு, உடை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான். இது மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். இப்படியாக எல்லா இடங்களிலும் உயிர்கள் அனைத்தையும் இயற்கை ஒன்றிணைக்கிறது. இரத்தமும்…

கே.எஸ் மணியம்: மரணமிலா பெருவாழ்வு

சொற்ப காலம் கொள்ளும் இம்மானுட வாழ்வில் மனிதன் தன் இறுதி கணம்வரை எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் தேடி அடைய முடியாததை அவன் சந்ததி தேடுகிறது. முற்றிலும் புறவயமான இத்தேடலின் பின்னால் அவனது அகம் சார்ந்த வலிகளும் வடுக்களும் ஆயிரம் கதைகளைத் தேக்கி வைக்கின்றன. மூதாதையர்களின் இருத்தலை கேள்வி எழுப்புவதும் தன் இருப்பை மீள்பார்வை…

எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம்

கடந்த ஆண்டு (2019) தன்னுடைய நூல் வெளியீடு, பொதுவெளி கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என பல ஆண்டுகள் நீடித்திருந்த மௌனவெளியிலிருந்து திடுமென கிளம்பி வந்திருந்தார் எழுத்தாளர் கே.எஸ். மணியம். கல்வியாளர்களுக்கே உரிய நடையுடை பாவனைகள் இல்லாமல் நிழற்படங்களில் முழுவதும் கலைஞனாய் தோற்றமளித்தார்.  அதன் இடைப்பட்ட கணங்களின் பதிவுதான் இந்த நேர்காணல். ஜூன் 2019 ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில்…