மறதி

“வேசி… நான் மட்டும் இப்பொழுது ஊரில் இருந்திருந்தால், நிச்சயமாக அவளை ஏதாவது செய்திருப்பேன்… வேசி… காமப்பசி எடுத்து அலைகின்றாள்…” என உடைந்த ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக அக்கினோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனருகில் சுவரைப் பற்றியவாறு கிழவர் நின்று கொண்டிருந்தார். “அடுத்ததாக, அவள் மீது வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யலாமென இருக்கிறேன்… எனக்குச் செய்த துரோகத்துக்கும் மகனைச் சரியாகப்…

டாம் அண்ட் ஜெர்ரி

அந்த மொட்டை வால் பூனையைப் பிடித்து பொறித்து தின்ன வேண்டும். அதற்குச் சரியான திட்டமொன்றை வரைய வேண்டும். மஞ்சள் நிறமான அந்தப் பூனை எங்கள் தோட்டத்தில் ஒரு கோழிக்குஞ்சைக் கூட விட்டுவைத்ததில்லை. கலர் கோழிக்குஞ்சுகள், இறைச்சிக் கோழிக்குஞ்சுகளென பேதமின்றி தின்று விடுகிறது.  தோட்டம் முழுக்க எல்லா கோழிக்குஞ்சுப் பிரியர்களும் பயந்து நடுங்குவது அந்த மொட்டை வால்…

அரணென்றானவள்

1 2023ல் நித்யவனத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய முகாமில் நீலி இதழாசிரியரும், எழுத்தாளருமான ரம்யாவுக்குப் பெண்ணெழுத்து சார்ந்து ஓர்  அமர்விருந்தது. அதில் ரம்யாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் பெண்ணெழுத்தை முதன்மையாக வைத்து பத்திரிகை தொடங்கியிருக்கிறீர்கள், அதற்கு ‘நீலி’ என்ற ரத்தம் குடித்துக் கொல்லும் நாட்டார் தெய்வத்தின் பெயரை வைக்க காரணம் என்ன?” என்பதாக…

லதா கவிதைகள்

புத்தகங்கள் எதையோ மறைக்கின்றன நூலக நகரம் என்றொரு பெயரும் இந்நாட்டுக்கு உண்டு வட்டாரத்துக்கு ஒரு வசதியான நூலகம் வண்ணப் படங்களும் காட்சிகளும் விளையாட்டுமாக புத்தகங்களோடு பிள்ளைகள் “இங்கு யாரும் இலக்கியம் வாசிப்பதில்லை” என்றார்  எழுத்தாளர் கினோக்குனியா புத்தகக்கடை மூன்றாவது கிளையைத் திறந்தது. “இந்நாட்டு மக்கள்  புதிதாக வரும் எதையும் வாங்குவார்கள்” என்றார் அவர். அவருக்கும் நூல்களை…

தமிழாசியா சந்திப்பு 21: மறக்கப்பட்ட முன்னோடிகள்

நூற்றாண்டு கடந்த தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரிரு கதைகளின் வாயிலாகவே நினைவுக்கூரப்படும் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர்.  அத்தகைய எழுத்தாளர்கள் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் பங்களிப்பால் முக்கியமானவர்களாக மதிப்பீடப்படுகின்றனர்.  நவீனத் தமிழ்ச் சிறுகதை மரபுக்கு உரம் சேர்த்தவர்களாகவும் நினைவுக்கூரப்படுகின்றனர். தமிழ்ச் சிறுகதைகளின் சாரமான பகுதியை அறிந்துகொள்ளும் முயற்சியில் தவறவிடக்கூடாத முன்னோடி எழுத்தாளர்கள் சிலரின் கதைகள் குறித்தே கடந்த…

தமிழாசியா சந்திப்பு 22: எதிர்மறை உலகத்தின் ஒளி

தமிழாசியாவின் 22-வது சந்திப்பில் அ. மாதவன் அவரின் புனைவுலகத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு சிறுகதைகளைக் கலந்துரையாடினோம். அ.மாதவன் 1970-களில் தொடங்கி கட்டுரை, சிறுகதை, நாவல் எனப் பல இலக்கிய வடிவங்களில் தனது படைப்புகளை வழங்கியுள்ளார். இவருடைய சிறுகதைகள் இயல்புவாதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருப்பதால் இலட்சியங்களுக்கு அப்பாற்பட்டு மனித இயல்புகளான பசி, காமம், வன்மம் ஆகியவற்றில்…

பெருஞ்செயல்களின் கொண்டாட்டம்: முக்கோணக்கதைகள்

‘முக்கோண கதைகள்’ நிகழ்ச்சிக்கு முதல் நாளே (31.5.2025) அ. பாண்டியன், தேவகுமார் ஆகியோர் கோலாலம்பூர் வந்து சேர்ந்திருந்தனர். YMCA கட்டடத்தில் தங்கும் வசதியும் இருப்பதால் அவர்களுக்கான அறையை அங்கேயே பதிவு செய்திருந்தேன். முதல் நாள் இரவே மண்டபத்தைத் தயார் செய்யத் திட்டமிட்டிருந்தோம். பதாகை பொருத்துவது, நாற்காலிகளை அடுக்குவது எனச் சில பணிகளை முன்னமே செய்து வைப்பது…

ஐந்தடியில் ஓர் உலகம்: மலாயில் மொழியாக்கம் கண்ட தமிழ்ச் சிறுகதைகள் குறித்த உரையாடல்

இன்னொரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின் ஆழ்மன வெளிப்பாடுகளை மொழிபெயர்ப்பு இலக்கியமே நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு உலகம் முழுவதும் தீவிரமான வாசகர்கள் உள்ளனர். முக்கியமான உலக இலக்கியங்கள் தமிழில் காலந்தோறும் மொழியாக்கம் கண்டு வந்திருக்கின்றன. மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடக்கக் காலத்தில் சில மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பரவலான வாசகப் பரப்பைச்…

இளையோர் குறுநாவல் போட்டி

வல்லினம் இலக்கியக் குழு இளையோர் குறுநாவல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளையோரின் வாழ்வைப் புனைவுகள் வழியாகப் பதிவு செய்வதும் அவர்களிடையே எழுத்தார்வத்தை உருவாக்குவதும் இந்தப் போட்டி நடத்தப்படுவதின் அடிப்படை நோக்கங்களாகும். இந்தக் குறுநாவல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை: முதல் பரிசு: RM 1500.00 இரண்டாம் பரிசு: RM 1000.00 மூன்றாம்…

“சினிமா துறை என்பதை சமுராய் வீரனின் பாதை அல்லது துறவியின் பாதை என்று சொல்வேன்,” – சஞ்சய் பெருமாள்

இயக்குநர் சஞ்சய் பெருமாள் மலேசியத் திரையுலகச் சூழலில் ‘ஜகாட்’ படத்தின் வழி நன்கு அறியப்பட்டவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 28வது மலேசியத் தேசியத் திரைப்பட விருது விழாவில் ‘ஜகாட்’ படம் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றதோடு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதையும் சஞ்சய்க்குப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய ‘ப்ளூஸ்’, ‘மாச்சாய்’ ஆகிய…

கடுவெளி காந்தள்

“ஆன்மிகம் என்பது ஆதி தெய்வம் அல்லவோ, அது கோருவது மானுட பலி. ஒரு வண்டி நிறைய புல் கட்டுகளைத் தின்று, ஒரு செம்பு பால் மட்டும் கறக்கும் பசு போன்றது அது. இங்கே அறிவதை விட, அறிந்ததை விடுவதே அதிகம்.” சுவாமி பிரம்மானந்தரின் வரிகள். ‘வந்தவழி’ எனும் நூலில், முன்னுரையாக எழுதியது. அதை வாசித்த காலங்களில்…