தமிழ் உதயா கவிதைகள்

கொலைக்காடு ஒன்று வெவ்வேறு மர்மங்களால் ஆனது முட்களால் , வாள்களால், துளைக்கும் ரவைகளால், விடமேறிய சொற்களாலும் கூட. அவரவர் மனங்களின் எடைகளைப் பொறுத்தது சாவுக்கு சாவு மாறுபட்ட வெகு நீண்ட நாளொன்றில் நான் வரைபடத்தோடு கொலைக்காட்டுக்குச் சென்றேன் எட்ட நின்று அமிழ்தம் கவிழ்ந்த விடத்தில் கை நனைத்தேன் பருத்திச்சுளை தின்று பாற்பற்கள் கொழுத்திருந்தன ஆயிரம் நீர்ச்சுனைகள்…

“பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்

காலஞ்சென்ற கிளந்தான் மாநில முதல்வர் நிக் அப்துல் அசிஸ் அவர்களுக்குப் பிறகு எளிமையான வாழ்க்கை மூலம் அரசியல் சூழலில் கவனத்தைப்பெற்றவர் டாக்டர் ஜெயகுமார். எளிய வீடு, வாகனம் என்பதோடு ஆண்டுதோறும் அவர் அறிவிக்கும் தனது சொத்துடமை பிரகடனம் மலேசிய அரசியல்வாதிகளில் யாரும் கடைப்பிடிக்காத கொள்கைகள். 2008 ஆம் ஆண்டு மலேசிய சோசலிசக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான…

“உலகுக்கு நான் விட்டுச்செல்வது எனது நூல்களைத்தான்” – பி.கிருஷ்ணன்

சிங்கப்பூரின் முன்னோடி மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான  பி. கிருஷ்ணன் இலக்கியப் பணிக்காக சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் முதல், தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது எனப் பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1953ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்பகால நிறுவனராகவும் துணைச் செயலாளராகவும் இருந்த…

சு.வேணுகோபால் பதில்கள்

மதிப்பிற்குறிய ஐயா. நான் கடந்த முறை கேள்வி கேட்டிருந்த ஆதவன். புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா இல்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் ஒரு கேள்வி. தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் எடிட்டிங் இன்றியும் எழுத ஏன் அகப்பக்கம் ஒன்று வைத்திருக்ககூடாது ? ஆதவன், தமிழகம்   அன்புமிக்க ஆதவனுக்கு, என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் எடிட்டிங் இல்லாமலும்…

ஊதா நிற தேவதைகள்

1982-இல், எழுத்தாளர் எலிஸ் வால்கர்  எழுதிய ‘The Colour Purple’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம்,  இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1985-இல் வெளிவந்தது. இந்நாவலை எழுதிய எலிஸ் வால்கர்  நாவலுக்கான PULIZER விருது பெற்ற முதல் ஆப்பிரிக்கர்-அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. Jaws, Indiana Jones, Jurassic Park போன்ற பல வெற்றிப்…

பெருமிதம், தாழ்வுணர்வு மற்றும் சில தடுமாற்றங்கள்

01) மலேசியாவிலிருந்து ‘வல்லினம்’ இலக்கியச் செயற்பாட்டியக்கத்தைச் சேர்ந்த குழுவினர் 2018 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களுடைய வருகையின் நோக்கம் மலேசிய இலக்கியம் பற்றிய அறிமுகத்தையும் அதையொட்டிய பரஸ்பர இலக்கிய உரையாடல்கள், அறிமுகங்களையும் நிகழ்த்துவது. இதை வல்லினம் இதழின் ஆசிரியர் ம. நவீன் தன்னுடைய பதிவில் கீழ்வருமாறு தெளிவாக விளக்கியுள்ளார். “‘வல்லினம் 100’ களஞ்சியத்தை…

சிலந்தி

ஐந்தடி அகலத்தில் நீளமாக இருக்கும் அந்தத் தாழ்வாரத்தின் பூத்தொட்டிகளில் கரும்பச்சை, இளம்பச்சை, செம்பச்சை என்று பலவண்ணப் பச்சைகளில் இருந்த இலைகளில் வெய்யில் நீண்டு படர்ந்திருந்தது. நீளநீளமான வெள்ளைக்கோடுகள் இருக்கும் இலைகள் நிறைந்த செடியின் ஓரமாக எனது நாற்காலியை நிறுத்திவிட்டு, தனது கைப்பெட்டியைத் திறந்து ஒரு பெரிய நீலநிறத் துணியை எடுத்து எனது கழுத்தைச் சுற்றிக் கட்டினான்…

”ப்ளூடூத் ஜோஹன்”

ப்ளூடூத் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதும் அது தானாகவே வந்து ஜோஹனின் காதுகளில் அமர்ந்துகொண்டது. அது தரம் உயர்த்தப்பட்டு வெவ்வேறு வடிவம் எடுத்தாலும் உடனுக்குடன்  எப்படியாவது அவரை வந்தடையும் ரகசியம் யாரும் அறியாதது. அவற்றின் வழியேதான் நானாவித உலகப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டிருந்தார். சிலுவாருக்குள் நேர்த்தியாக நுழைக்கப்பட்ட சிவப்பு பனியனும் இடையில் பெல்ட்டும் அணிந்து புல்தரையில் அவர் பேசிச்செல்லும்…

வெள்ளை பாப்பாத்தி

மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து தாலாட்டுவதுபோல இருக்கும். அவள் பள்ளிக்கு மட்டம் போடத்தொடங்கிய ஒருசில நாட்களுக்கு முன்புதான் இறுதியாண்டு சோதனை முடிந்திருந்தது. இரவல் பாடப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, தேர்வுத் தாட்களையும் முடிவு அட்டையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லி கதிர்வேலுவை ஆசிரியர் ஏவும்…

சடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும்

வல்லினம் சம கால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் ஆவணத் தொகுப்பிலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வரும் இயக்கம். தொடர்ந்து ஆவணப்படங்களை வெளியிடுவதுடன்  தகுந்த படைப்பாளிகளைக் கௌரவிக்கவும் அவர்களின் படைப்புகளை தீவிரமான வாசிப்புப்  பரப்புக்கு முன்னெடுத்துச் செல்லவும்  வல்லினம் முனைப்பு காட்டி வந்துள்ளதை மலேசிய இலக்கியத்தை ஊன்றி கவனித்து வரும் யாரும் மறுக்க முடியாது.…

உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்

ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி…