“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா

தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’  இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும்…

மாறுதல்

அருவி குளிர்ச்சியை அள்ளிக் கொட்டியபடி ஓடுகிறது. தார்ச்சாலையில் நின்று பார்க்காமல் உள்ளே வந்து நின்றால், வெண்மஞ்சள் பாறையில் அருவி குதித்து வரும் நிர்மால்யம் ஈர்க்கிறது. தார்ச்சாலையில் நின்றபோது, இவ்வளவு அழகான அருவியை முழுசாகப் பார்க்கவிடாமல் மரங்கள் மறைத்தன. அருவியின் காலடி மரங்களின் கீழே நீரடித்து வந்த சருகுகள் மெத்தையைப்போலக் கிடக்கின்றன. மூன்று மாதங்களாக மழையே இல்லை.…

Etger Keret: மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்

இஸ்ரேலிய எழுத்தாளர் Etger Keret (1967) சமகால உலக இலக்கியத்தில் முக்கியமான சிறுகதையாசிரியா்களில் ஒருவர். Pipelines (צינורות, Tzinorot, 1992), அவரது படைப்பில் வெளியான இம்முதல் சிறுகதை நூல் மிகக் கடுமையான புறக்கணிப்புக்கு உட்பட்டது. ராணுவத்தில் தன்னுடன் பணிபுரிந்த நண்பனின் மரணத்திற்குப் பிறகு எழுத வந்த அவரது இரண்டாவது நூல் Missing Kissinger  (געגועיי לקיסינג’ר, Ga’agu’ai…

எஸ். பி. பாமா: கலையமைதியை விழுங்கிய தீவிரம்

மலேசிய பெண் எழுத்தாளர்களில் 80களில் எழுதவந்த எழுத்தாளர் எஸ்.பி. பாமா. பின்னர் வானொலி தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002-ஆண்டு முதல் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எழுதத் துவங்கினார். நாளிதழ் ஞாயிறு பதிப்புகளில் வெளிவந்த (2002க்கு பிறகு என்று நினைக்கிறேன்) பதிமூன்று சிறுகதைகளைத் தொகுத்து ‘அது அவளுக்குப் பிடிக்கல’ என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார்…

மலேசியத் தமிழ் நாளிதழ்கள்: ஆதி. குமணன் விட்டுச் சென்ற சிதைவுகள் (பகுதி 2)

ஆதி குமணன் மறைவுக்குப் பிறகே மலேசிய பத்திரிகைச் சூழலில் கணிசமான மாற்றங்கள் உருவாயின. அந்த மாற்றங்களை அறிவதன் மூலமே இன்றைய பத்திரிகைச் சூழலையும் அறியமுடியும். 28 மார்ச் 2005-இல் ஆதி குமணன் மரணமுற்றார். இவரின் மரணத்திற்குப் பிறகு மலேசிய நண்பனில் நிர்வாகப் பிரச்சினை தலைதூக்கியது. Penerbitan Sahabat Malaysia-வின் கே.டி.என். உரிமத்தை சிக்கந்தர் பாட்ஷா வைத்திருந்தார்.…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 1

சிங்கப்பூரை வணிக மையமாக நிறுவி தமது பணியை முடித்துக்கொண்டு 1824ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டார் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ். அவரையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் மற்றும் மூன்று பெரிய பெட்டிகள் நிறைய இந்த மண்ணின் இலக்கியங்களையும் சுமந்துகொண்டு சுமாத்திராவிலிருந்து கிளம்பிய ஃபேம் என்ற கப்பல் அன்று இரவே தீப்பிடித்து எரிந்துபோனது.…

அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல்

தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது…

யாக்கை

“ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்” என்று அவள் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியது அவனுக்குப் பிடித்திருந்தது. முடியை இழுத்துவாரி குதிரைவால் கொண்டை கட்டியிருந்தாள். கொண்டைக்கு மட்டும் பழுப்பு நிற வண்ணம். சிலிவ்லெஸ் உடலோடு ஒட்டாதபடிக்கு மார்புகள் நிமிர்ந்திருந்தன. வெள்ளை லேகிங்ஸில்  பிட்டங்கள்…

ஆண்கள் அழ வேண்டாம்

தான் ஓர் ஆண் என்று மனதார ஏற்றுக் கொண்ட ஒரு இளம் பெண் சமுதாயத்தின் மத்தியில் ஆணாக வாழ, ஆணாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனையும்போது ஏற்படும் சிக்கல்களையும் கொடூரங்களையும்  Boys Don’t Cry எனும் படக்  கதையின் வழி காட்டியுள்ளார் இயக்குனர் கிம்பர்லி பியர்ஸ்.( Kimberly Pierce). அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா( Nebraska) மாநிலத்தின் தலைநகரான…

இலக்கியம் நடந்து சென்ற பாதையில்தான் வாழ்க்கை இருக்கிறது

புதுச்சேரியில் பிறந்த ந.பாலபாஸ்கரன், சிறுவயதிலேயே பினாங்கு வந்து உயர்நிலைப் படிப்பை மலேசியாவில் முடித்தார். பின்னர் தமிழகத்தில் ஓராண்டு படித்துவிட்டு, 1963ல் கோலாலம்பூர் ரேடியோ மலாயாவில்  வேலைக்குச் சேர்ந்தார். மலாயாப் பல்கலைக்கழத்தில் பொருளியலில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து அதை முடிக்கவில்லை.பின்னர் மலாயாப் பல்கலையின் இந்திய இயல் புலத்தில் பி.ஏ.ஹானர்ஸ், எம்.ஏ கல்வியை முடித்தார். ‘மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்’…