
“நான் கீழேதான் போகிறேன், எலியாஸ் என்னைப் பொதுத் தொலைபேசியிலிருந்து, அவனுக்குப் போன் போடச்சொல்லியிருக்கிறான். இரு, வந்துவிடுகிறேன், அதற்குள், முடிந்தால் சூசனை இங்கிருந்து அனுப்பிவிடு. அவள் இங்கு இருந்தால், நடப்பது யாவற்றையும் அவள் தெரிந்துகொண்டால், உனக்கும் எனக்கும் எல்லாவிதத்திலும் பிரச்சனைதான்” என்று எரிந்து விழுந்தான் ரானே. “அவளை விடு, அவள் அதிகாலையில்தான் நன்றாகத் தூங்குவாள். அந்த அறையின்…











