(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை) “பொட்டக் கமுனாட்டிக்கு வந்த வாழ்வ பாரு? நீயெல்லாம் மனுச ஜாதியில சேர்த்தியா? புடுக்க அறுத்துகிட்டு, மார வளர்த்து, பூவும் பொட்டும் வைச்சிருந்தா, நீ பொம்பளையா ஆயிடுவியா? உன்னால பொம்பளைங்க மாதிரி புள்ளையைப் பெத்துக்க முடியுமா?” எதன் பொருட்டோ பொதுவெளியில் தொடங்கிய விவாதம்,…
கேளாத ஒலி
(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை) பத்து நிமிடங்களைத் தாண்டியும் ஜானுடனான உரையாடல் நீண்டு கொண்டிருந்தது. கிஷன் பேசுவான் என்று ஜான் சொன்னப் பின்பும் மெளனமே நீடித்தது. ஜான் என்பது அவரின் உண்மையான பெயர்தானா என்பது கூட தெரியாது. பவுல் ,மோரீசன், என்று ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில்…
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
இது இந்தியாவில் அவரது அதிகாரப்பூர்வமான கடைசி விடியல். கடைசி விழிப்பும் கூட. விடியல் வேண்டுமானால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம். விழிப்பு என்பது உறங்கினால் மட்டும்தானே சாத்தியம்? அவரால் படுத்த நிலையிலேயே உடலின் பாரத்தை உணர முடிந்தது. குளிரூட்டியையும் மின்விசிறியும் மீறி லேசாக வியர்ப்பது போலிருந்தது. அவர் படுத்தவாறே அறையை ஆராய்வது போல பார்வையைச் சுழற்றினார். இரவு…
புரட்சிக்காதலன்
“எனக்கு என்ன ஆயிற்று?.. ஒன்றும் இல்லையே.. நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு ஏன் சிந்தனை என்பது இவ்வளவு பாரமாக ஆகிப்போனது?” சிந்தித்துக்கொண்டே விழா அரங்கின் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்துவிட்டேன். வந்தவுடனேயே ரிஷானாவின் ஆடி காரைப் பார்த்துவிட்டிருந்தேன். மூன்று லிட்டர் V6 வெண்ணிற ஆடி Q7 மாடல். அந்தக் காரின் தனித்த அம்சமே அதை பார்த்தவுடன் புதியதா பழையதா…
பிரவாகம்
அருகருகே இரண்டு நட்சத்திரங்களைக் கண்டபோது எம். எஸ். சுப்புலட்சுமியின் இரண்டு வைர மூக்குத்திகள் ஞாபகத்துக்கு வந்தன. சமீபத்தில் யாரோ பாடலின் லிங்க்கை வாட்ஸாப் குரூப்பில் அனுப்பியிருந்தார்கள். ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா….’ அவர் பாடப்பாட இரண்டு புறங்களிலும் மூக்குத்திகள் ஒளியைக் கொட்டின. ஒளி கொட்டுமா என்ன… என்னவோ அப்படித்தான் அவளுக்கு நினைக்க தோன்றிற்று. பாட்டிலிருந்து சிந்தனை மூக்குத்திகளுக்குத் தாவியது. மனம்…
கோட்ட வூடு
கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன். பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப் போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போ தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப் போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம். வெத்தலையைப் பாக்கோட மென்னு சவச்சி எச்சிலோட முழுங்கிட்டு, திண்ணையில கால் நீட்டிட்டு உக்காந்திருக்குற…
வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா
வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதை போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்தது. அதே சமயம் யாழ் பதிப்பகம் மூலம் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை போட்டி ஒன்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டது. எழுத்தாளர் ம.நவீன், அ.பாண்டியன்,…
ந. பாலபாஸ்கரன் ஆவணப்படம்
இது 2017இல் இயக்கிய ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம். தொண்டை புற்றின் காரணமாக முற்றிலும் குரலை இழந்த நிலையில் இந்த ஆவணப்படத்தை இயக்க எங்களுக்கு ஒத்துழைத்தார் பாலபாஸ்கரன். சிங்கை வாசகர் வட்ட ஆதரவும் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்ததால் இந்த ஆவணப்படம் சாத்தியமானது. எழுத்தாளர் லதாவும் இந்த ஆவணப்படத்துக்கு பங்களித்தார். பாலபாஸ்கரன் எழுத்தில் வழங்கிய…
ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்
ந. பாலபாஸ்கரன் உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 19 தமது 82 வயதில் காலமானார் என்ற தகவலை ஷாநவாஸ் தெரிவித்தபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை. கடும் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். மரணத்துடன் போராடுவதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொண்டே வந்தார். ஒருவகையில் அவர் தன் மௌனத்தால் அதை தன் அன்புக்குரியவர்களுக்கு முன்னமே அறிவிக்கவும் செய்தார். வானொலிக்…
சாம்பல்
“இது என்ன புது சடங்கா இருக்குது. எங்க தாத்தா, பாட்டி, சின்னத்தாத்தா யாருக்குமே இப்படிசெஞ்சதில்லை” என்றாள் சுந்தரி. “எரிச்சதுக்கு மறுநாள் பால் ஊத்தறதுக்கு சுடுகாட்டுக்கு போவாங்க. அங்க ஒரு பிடி சாம்பல எடுத்து ஒரு சொம்புல போட்டு துணியால மூடி கட்டிடுவாங்க. அப்பறம் நேரா சீறங்கப்பட்டணம் போயி கரைச்சிட்டு வந்துடுவாங்க. அதத்தான் நான் பார்த்திருக்கேன்” வேலு…
அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி
2019இல் தொடங்கி தமிழ் புனைவிலக்கியத்தில் இயங்கும் ஒரு தலைமுறையின் வருகையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.எஸ்.எஸ்.வி நவின், சுஷில்குமார், வைரவன், செந்தில் ஜெகந்நாதன் போன்றவர்கள் தமிழகத்திலிருந்தும் அரவின் குமார் மலேசியாவிலிருந்தும் சப்னாஸ் ஹாசிம் இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வகைமையில் சிங்கப்பூரில் உருவான முக்கிய இளம் படைப்பாளியாக கே. முகம்மது ரியாஸைச் சொல்வேன்.…