இந்திய கலையின் நோக்கங்கள்

இன்றிருக்கும் இந்திய கலை இரண்டாயிரம் வருடத்திற்கு மேலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இக்காலகட்டத்தில் பல சிந்தனைகள் செழித்து வளர்ந்து சிதைந்துள்ளன. பல்வேறு இனங்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்துள்ளன, அவை இந்தியாவிற்குள் கலந்து  அதன் அறிவு செல்வத்திற்கு எண்ணற்ற வகையில் பங்களிப்பாற்றியுள்ளன. பல அரசவம்சங்கள் ஆட்சிசெய்து மறைந்துள்ளன. ஆகவே இந்திய கலையில் பல்வேறு மக்களின் சிந்தனைகள், எதிர்பார்ப்புகள்,…

மரணக்குழி

1 உறக்கத்தின் நடுவே போரோலத்தின் கதறல் கேட்டு விழிப்பு தட்டியது. இமைகள் இரண்டும் ஒட்டிக், கண்கள் திறக்க மறுத்தன. குழிக்குள் நான்கைந்து நாட்களாக உட்கார்ந்துக் கொண்டே தூங்கியதால் வந்த அயர்ச்சி. கண்களை நன்றாகத் திறந்தபோது மொத்த காடும் இருளால் சூழ்ந்திருந்தது. மூக்கின் முதல் சுவாச உணர்வு வந்ததும் மழை நீரில் பட்டு அழுகிய உணவின் வாடை…

ம்ருகமோக்ஷம்

1-காக தூதன்  முன்வினையின் காரணமாக பருந்தால் வேட்டையாடப்பட்டு பாதி உடலை இழந்த குருவியைக் காகம் ஒன்று பராமரித்துக்கொண்டிருந்தது. குருவியின் உயிர் விசை பாதி உடலிலும் பாதி வெளியிலும் கிடந்து அதிர்ந்துகொண்டிருந்தது துடியாக. காகம் உணவும் நீரும் குருவிக்கு அளித்து அதை நிழலில் கிடத்தி பார்த்துக்கொண்டது.  பிரக்ஞை மீண்ட குருவி காகத்தின் அருகாமையைக் கண்டு தன் இறுதிக்காலத்தை…

வெண்நாகம்

“டாக்டர்! நா திரும்ப அத பாத்தேன்… ரொம்ப கிட்டத்துல” அகிலின் கைகள் உதறின. வார்த்தைகளை வெளிவிடாதபடி ஏதோவொன்று தடுத்தது. அறையுள் நுழையும்போதே ஒருவித பதற்றத்தோடிருந்தான். ‘நான் உடனே தங்களைச் சந்தித்தாக வேண்டும்’ என்று அவன் குறுஞ்செய்தி அனுப்பியபோதே மருத்துவர் குணாவிற்கு ஏதோ அவனை உறுத்துவது விளங்கியது. அவனை நாற்காலியில் அமரச் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்.…

கீரவாணி

காலையிலிருந்தே ஒரே காற்றும் மழையுமாக இருந்தது. சங்கீத வகுப்பு இருக்கும் நாளில் மழை பெய்தால் எனக்கு கொஞ்சம் சலிப்பு வரும். காரணம் சங்கீத ஆசிரியர் ஈப்போ மாநிலத்தைச் சேர்ந்தவர். குளிர் தாங்க மாட்டார். அதுவும் 1997-இல் கேமரன் மலை பசுமை மாறாமல் இருந்தக் காலம். “எப்படிதான் இந்தக் குளிருல இருக்கீங்களோ? அதுவும் குளிர் சட்டைக் கூட…

சிசில் ராஜேந்திரா: உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படும் கவிஞர்

முன்னோட்டம் மனிதனின் அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான ஒன்று கருத்து சுதந்திரம். ஒருவர் தன் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த மற்றும் கற்பிக்க எவ்வித தணிக்கையும் தடையும் இல்லாமல்  செயல்பட முடியுமானால் அதுவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எனப்படுகிறது. மலேசியாவில் பெரும்பாலான நாடுகளைப் போலவே பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் அவை சில…

அணைத்தல்

கைப்பேசித் திரையில் முகத்தைப் பார்த்தபோது கண்ணிமைகள் தடித்துப் போயிருப்பது தெரிந்தது. இரண்டு மாதமாகவே சரியான தூக்கமில்லாமல் அலைகிறேன். சுகுமாறன் அங்கிள் மறுபடியும் வேலையில் சேர அழைத்ததற்கும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். இன்று அம்மாவுக்கு எப்படியும் குணமாகிவிடும் என எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கண்களைக் கசக்கி விட்டு அமர்ந்தேன். காலையிலேயே தூக்கம் குறித்த பயம்…

ஒப்புரவு

பாலம் ஏறிய சிறிது  தூரத்தில், இடது கை கட்டை விரலைக் கவிழ்த்து சைகை காட்டியபடி இருவர் நின்றிருந்தார்கள். தலைகவிழ்ந்த சாலை வெள்ளை விளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளைஞனும், ஒரு நடுத்தர வயது பெண்ணும்  தனித் தனியாக உதவி கேட்டது தெரிந்தது.  அவன் கையைக் காட்டிய விதமா அல்லது அவன் உடலில் தெரிந்த நிலைகொள்ளாத தன்மையா எனப்…

பூஜாஅன் ஹாத்திக்கு

1985 – ஆம் ஆண்டில் ஐந்தாம் படிவம் பயின்ற தமிழ்மொழிக் கழக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டி, அந்தக் காலகட்டத் தமிழ்மொழிக் கழக மாணவத் தலைவன் பாஸ்கரன் பழைய மாணவர்கள் வாட்சப் குழுவின் மூலம் அழைப்பு விடுத்திருந்தான். அந்தக் குரல் பதிவை எனக்கு அனுப்பி வைத்திருந்தாள் தனலட்சுமி. “வாட்சப் குழுவில் சேர்கிறாயா?” என்கிற கேள்வியும் உடன்…

சிறுத்தை

“அண்ணா, நான் திவ்யா பேசுறேன். அவருக்கு உடம்பு சரியில்லை’’ என்ற குரல் பதிவைக் கேட்டதும் கைகள் நடுங்கின. சட்டெனச் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தினேன். “மாலனுக்கு என்னா ஆச்சி?” எனக் குரல் பதிவை அனுப்பினேன். திவ்யாவிடம் பதில் இல்லை. அந்த அமைதி என்னைக் குடைந்தது. நான் செல்லத்தான் வேண்டும். நண்பன் என்பதற்காக இல்லாவிட்டாலும் என் தொழில் தர்மம்…

வெண்ண புட்டு

‘ஏன்மா… நவுறு. பொண்ணு, மருமயன், பேத்திலாம் வந்துருக்காங்க பாரு. வழிவுடு’ ‘சுபத்துரா, அம்மாவ பாத்தியலா…’ ‘காசிக்கு அந்தப்புரம் காசரளி பூந்தோட்டம், நாங்க கண்டா வருவோமுன்னு கதவடச்சி போனியோ, சைஞ்சிக்கு அந்தப்புரம் செவ்வரளி பூந்தோட்டம், நாங்க தெரிஞ்சா வருவோமுன்னு செடிதாப்பா போட்டியோ…’ என்று சின்னதங்கச்சி பாடிக்கொண்டிருந்தாள். ‘ஆயாவ, வாயாமுடி வெளியகொண்டு போய் உட்காரவை’ ‘நல்ல மனுசி… எடுக்க,…