நீண்ட மௌனத்திலேயே கரைந்தது பொழுது. எதிர் சோபாவில் அமர்ந்திருந்த கதிரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு சொல்லும் எழவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஓவியத்தையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு அசாத்தியமான சூழ்நிலையில், ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டேயிருப்பது அலையும் எண்ணங்களை ஒருமுகப்படுத்த உதவுகிறது. அந்த ஓவியம் பழைய பாணி ஓவியம்தான். அரிதானதும் அல்ல. அந்தியின் காவிநிற…
குதிரை
எம்.கே குமார் சிறுகதைகள்
தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் தமிழ் இலக்கியம் தொடர்ந்து நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியம் என்று தனித்த அடையாளங்களைப் பெறுவதில் இன்றும் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் படைப்புகளை ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பெருநிலங்களில் குடியேறிய தமிழ் எழுத்தாளர்களின் புலம்பெயர் இலக்கியங்களோடு ஒப்பிட்டு…
வாடாமல் வாழும் வாழைமரங்கள்
சிங்கப்பூரில் 1942 தொடங்கி 1945 வரை நீடித்த ஜப்பானியராட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லிச் செல்கிறது வாழைமர நோட்டு. அந்த மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியராட்சி வரலாற்றின் இருண்டப்பக்கங்களையும் அவலங்களையும் முன்னிறுத்தி பேசுகிறது இந்த நூல். சரியாகச் சொல்வதென்றால் அந்த வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் இணைத்து மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் இந்நூலின் வழி அதன் ஆசிரியர் ஹேமா பேசுகிறார்.…
வாசகர் வட்டமும் என் வட்டமும்
கடந்து வந்த பாதை – தி சிராங்கூன் டைம்ஸ்
சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து, அரைநூற்றாண்டு கடந்து, தன் பொன்விழா தேசிய தினத்தை 9 ஆகஸ்ட் 2015இல் கொண்டாடியது. அந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழும் தன்னம்பிக்கையுடன் ‘சிங்கைத் தமிழரின் சிறப்பு’ என்ற முழக்கவரியுடன் 32 பக்க அச்சிதழாகத் தன் முதலடியை எடுத்து வைத்தது. நான், எம்.கே. குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர்…
அத்தர்
இறுதி யாத்திரை
ஒன்றாக செத்துப்போக முடிவு செய்ததும் அந்த புளோக்கின் பன்னிரண்டாம் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து விடும் யோசனை தான் முதலில் வந்தது. இன்றைய சூழலில் ஆகச் சுலபமானது, ஆனால் சிறந்த முறையல்ல. அந்த வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையின் மீது தீராத வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். ஒருகணம் உச்சமேறிய அச்சமோ, கோபமோ, விரக்தியோ ஏதோவொன்று அந்தப்…
நிகழ்காலத்தில் இருப்பவர்களும் நித்தியத்துவமானவர்களும்
சிங்கப்பூர் இயக்குனர் கே.ராஜகோபால் அவர்கள் இயக்கி 2016 ஆம் ஆண்டில் வெளியான ‘A Yellow Bird’ திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து வருடங்களாக வாழ்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் எந்தச் சுவடுகளும் இல்லாமல் முற்றிலும் வேறொரு சிங்கப்பூரை எனக்கு அறிமுகம் செய்த படம் அது.
ஒளியாலான கதைகள்
சித்துராஜ் பொன்ராஜ் என்ற எழுத்தாளரை நான் அறிந்துகொண்டது 2016இல். சிங்கப்பூர் இலக்கியங்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொடர் விமர்சனக் கட்டுரைகளின் வழி சித்துராஜின் ‘மாறிலிகள்’ தொகுப்பு கவனம் பெற்றது. ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரை முக்கியமானது. தொகுப்பில் இருந்த சிறுகதைகளை ஒட்டிய ரசனை விமர்சனம் அன்றி, சித்துராஜ் என்கிற எழுத்தாளரின் வருகை சிங்கப்பூர் இலக்கியத்தில் எவ்வகையில்…
ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்
புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று…