இன நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் விதமாய் சிங்கப்பூரின் அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு, அன்று காலை பத்து மணியளவில் செம்பவாங்க் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. குங் சங் கூவாங் அவர்கள் வருவதாயிருந்தது. வரலாற்றுச்சிறப்பு மிக்கதாய் டேவிட் கருதியதால் அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து குளித்து முடித்து பட்டுவேட்டி சட்டையோடு…
தொழில்
வகுப்பறையில் மாணவர்கள் எனக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கும் எனக்கும் ஏற்கனவே ஓர் உடன்பாடு ஒப்பந்தமாகியிருந்தது. மாணவர்களாகட்டும் நானாகட்டும் பத்து நிமிடத்திற்குள் வகுப்பில் இருக்க வேண்டும். அடுத்த பதினோறாவது நிமிடத்தில் பாடம் ஆரம்பமாகும். ஐந்தாவது நிமிடத்தில் வகுப்பில் நுழைந்தேன். அவர்கள் முகத்தில் சின்னதாய் ஏமாற்றத்திற்கான ஓர் அறிகுறி. பாடம் தொடங்கியது. சீன மாணவர்களுக்குத் தமிழ்மொழி வேற்றுமொழிப் பாடம். எட்டு…
கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்
பத்து வருடங்களுக்கும் மேலாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கி கொண்டிருக்கிறேன் என்றுதான் பெயர். இதுவரை என்னிடம் யாரும் நூலுக்கான முன்னுரையையோ நூல் குறித்தப் பார்வையையோ அச்சாகும் முன் நூலில் பிரசுரிக்கக் கேட்டதே இல்லை. எனக்கு 24 வயது இருக்கும். நண்பர் அகிலன் அவரது ‘மீட்பு’ கவிதை தொகுப்பு வெளியீட்டில் என்னை விமர்சனம் செய்யக் கூறினர். அத்தொகுப்பில்…
திறவுகோல் 6: ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்
மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனால் எழுதப்பட்டு சுடர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். ‘ஆப்பே கடையில் நடந்த 236-ஆவது மேசை உரையாடல்’, ‘மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்’ என இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ என்ற நாவல்தான் என்னை…
வல்லினத்தின் ‘படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம்’ 2017
வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி வல்லினத்துக்கு அனுப்பப்படும் சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம் ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…
உயிர்க்காடு
“நான் கீழேதான் போகிறேன், எலியாஸ் என்னைப் பொதுத் தொலைபேசியிலிருந்து, அவனுக்குப் போன் போடச்சொல்லியிருக்கிறான். இரு, வந்துவிடுகிறேன், அதற்குள், முடிந்தால் சூசனை இங்கிருந்து அனுப்பிவிடு. அவள் இங்கு இருந்தால், நடப்பது யாவற்றையும் அவள் தெரிந்துகொண்டால், உனக்கும் எனக்கும் எல்லாவிதத்திலும் பிரச்சனைதான்” என்று எரிந்து விழுந்தான் ரானே. “அவளை விடு, அவள் அதிகாலையில்தான் நன்றாகத் தூங்குவாள். அந்த அறையின்…
வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டது! – அரு.சு.ஜீவானந்தன்
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் அரு.சு.ஜீவானந்தனை முற்போக்கு இலக்கியத்தின் முகம் எனச்சொல்லலாம். இவரின் பல சிறுகதைகள் அக்காலக்கட்டத்து வாசகர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோலவே இன்றும் சில வாசிப்புக்கு ஏற்றதாய் உள்ளது. இலக்கியச் சூழலில் தனது கருத்துகளை சமரசமின்றி வைக்கும் அரு.சு.ஜீவானந்தன் தனது சிறுகதைகளிலும் கலாச்சார மீறல்களைச் செய்துப்பார்த்தவர். சில காலமாக புனைவிலக்கிய உலகில் இருந்து…
இருமொழி பாடத்திட்ட (DLP) விவாதம் – ஓர் எதிர்வினை
நண்பர் அனுப்பியிருந்த டிஎல்பி ((DLP) விவாதக் காணொளியை (‘நடப்பது என்ன?’) ஒரு மணி நேரம் செலவு செய்து பார்த்து முடித்தேன். உண்மையில், இருமொழித் திட்டம் மீதான விவாதங்கள் 2015 முதலே மிக விரிவாக நடைபெற்றிருக்க வேண்டும். டிஎல்பி திட்டம் குறித்த முழுத்தெளிவும் பெற்றோருக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மிக சொற்பமான அமைப்புகளும்…
கவிஞர் சக்திஜோதியின் கவிதையுலகம்
பொதுவாக எந்தக் கவிஞரையும் யாரும் நிராகரித்துவிட முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் அசாத்தியமான கவிதையை எழுதியவர்களாக, எழுதக்கூடியவர்களாகவே எல்லாக் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஏகப்பட்ட தொகுப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்தபடி இருக்கின்றன. அவற்றுக்கு தவறாமல் முன்னுரைகளும் மதிப்புரைகளும் தாராளமாகக் கிடைத்து விடுகின்றன. கவிதைகளை விமர்சிக்கத்தான் ஆளைக் காணமுடிவதில்லை. இன்றைய கவிதை இயக்கச் சூழலில் இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.…
கவிஞனுக்கான சினிமா
தலைசிறந்த ஒரு கவிஞனைப்பற்றிய முழுநீளப் படம் எடுத்தல் என்பது சில இலக்கிய நியதிகளுக்கும், கவிதைசார்ந்த உள்வாங்கலுக்கும் உட்பட்டே அமைதல் வேண்டும் என்பது பலரது கருத்தாகும். (தீவிர இலக்கியவாதிகள்) குறிப்பிட்ட ஒரு கவிஞரைப் பற்றிய பட ஆக்கங்களில் அவர்தம் வாழ்க்கை வரலாறு என்பது தவிர்க்க முடியாத, அதேநேரம் அவரது படைப்புக்களை திரையில் எவ்விதத்தில் பிரயோகிப்பது என்ற விவாதம்…
முன்னுரை
ஒரு நூலினை தனித்துவம் மிக்கதாகக் காட்ட வடிவமைப்பு, படங்கள், வண்ணம், அன்பளிப்பு, விளம்பரம் எனப் பல்வேறு சந்தைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை நூல், நூல் அல்லாதவைகளுக்கும் (எழுத்துக் குப்பைகளுக்கும்) ஒரே மாதிரியாகப் பயன்படுவது எல்லாக் காலங்களிலும் தவிர்க்க முடியாதது. சில சமயங்களில் எழுத்துக் குப்பைகளுக்குக் கிடைத்துவிடும் வெளிச்சம் தரமான நூல்களுக்குக் காலம் தாழ்த்தியோ அல்லது கடைசிவரை…