
மாலையில் ஊர்க்கூட்டம் என்று தெரிந்ததும் பிரகாசு மௌனமாகி விட்டான். அதிகம் பேசாதவன் என்றாலும் வழக்கமாகப் போடும் ‘ம்’ கூட அவனிடமிருந்து வரவில்லை. அதைப் பார்க்கச் சரசம்மாவுக்கு மனதில் கருக்கென்றது. வலியப் பேசினாலும் பதில் இல்லை. கைவேலைகளை ஏனோ தானோவென்று செய்தபடி அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். தன் பார்வையில் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல. ஆனால்…














