Category: சிறுகதை

ராம மந்திரம்

“இல்லி ஆஞ்சநேயர் கோயில் சாரி தேவாலயா எல்லிட்டு” அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டபோது என்னுடைய கன்னடம் நிச்சயம் அவரை எரிச்சல் படுத்தியிருக்கலாம். “பரவால்ல தமில்லையே கேளு. ஆஞ்சநேயர் அதோ ஓரமா நிக்காரு பாரு. வேணும்னா போய் கும்பிட்டுக்கோ. அடுத்த வாட்டி நீ கேட்டா அவரும் இங்க இருக்க மாட்டாரு” பேசிக் கொண்டே வாயில் கொஞ்சம் புகையிலையைத் திணித்துக்…

தீர்வை

“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது.   அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால்…

1992

1 ஜீவானந்தம் பஸ்ஸை விட்டு இறங்கிய போது அவனை கடந்து சென்ற ரிக் வண்டி அவனுக்கு அப்பாவை ஞாபகப்படுத்தியது. வீடு சென்றால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போதே கசந்தது. பையை தோளில் போட்டுக்கொண்டு நடக்கும் போது ஏதேதோ கலவையான எண்ணங்கள். தங்கை; அப்பா; பணம்; தோட்டம்; கல்யாணம் என்று உதிரிக் காட்சிகள். இன்னும் ஒரு…

அந்தம்

நிலவின் வெம்மையில் அசையாமல் குளிர்காயும் இருட்டு யானையைப்போல நின்றிருந்தது அக்குன்று. அதன் அடிவாரம் மெழுகுதிரி, எண்ணெய் மற்றும் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் கரைகட்டியிருந்தது. அக்குன்றுக்கு அருகிலிருந்த நிலத்தில்தான் மனித எலும்புகளைச் சமீபத்தில் தோண்டி எடுத்திருந்தார்கள். அக்குன்றினை நோக்கிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. பாதையைவிட்டு விலகியிருந்த மரங்கள் தமக்கு அடியில் லாந்தர்…

அசைவும் பெருக்கும்

தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர். “இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று…

ஊர்த்துவ தாண்டவம்

“சிவனோட அடிமுடியும்ம்ம்…அடிமுடியும்…” இராமசுப்பு பாட்டாவின் குரல் தனித்த சுருதியில் மேல் எழுந்தது. ஒரு மூலையில் சிறிய தும்மல் போல் எழுந்து மெல்ல மெல்ல காட்டை நிரப்பிச் செல்லும் சிம்மத்தின் குரல் அவை. என் அளவாச்சியை 1 அதற்கேற்றார் போல் இசைத்து பக்கப்பாட்டு பாட சிரமமாக இருந்தது. பின் பாட்டை நிறுத்திவிட்டு, அளவாச்சியை அவர் சுருதியோடு இணைக்க…

சாயம்

“இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?”  உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள். “அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்”   “அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?”…

சிருஷ்டியுலகம்

மெல்லிய பூஞ்சை வெயில் படர்ந்திருந்த முறாவோடையின் நீர்ப்பரப்பிலிருந்து பொட்டுப் பூச்சிகள் தாவித் தாவி ஓடும் நீரதிர்வுகளை, வண்டுகளின் இறக்கை பட்டு இலை மூடிய தொட்டாச்சுருங்கி பூக்களை, மாடு முறித்த எருக்கிலைச் செடியிலிருந்து சொட்டும் பாலை ஆயிஷா பார்த்தபடி இருந்தாள். இருளாகும் சமிக்ஞை போல அலங்கார தெருவிளக்கின் கண்ணாடி மூடிச்சிமிழிலிருந்து மூஞ்சூறு போல வெளிச்சங்கள் இடைவெளி விட்டு…

அனல் அவித்தல்

“கட்டத்தாத்தா எங்க போய்த்தொலைஞ்சாரு? தண்ணியமத்தலுக்கு நேரங்காணாதா?” அடர்நீலநிறக் கட்டங்கள் கொண்ட லுங்கியை ஏத்திக் கட்டியவாறு தன்ராஜ் கேட்டான். சட்டையணியாத அகல உடம்பின் ஓரத்தில் துண்டு தொங்கிக்கொண்டிருந்தது. அருகிலிருந்த பெஞ்சில் எதுவும் பேசாமல் பாஸ்கரண்ணாச்சி அமர்ந்திருந்தார். கருத்த எருமைத்தோல் போன்ற கைகள் இரண்டும் மரவிளிம்பைப் பிடித்திருந்தன. இடது கையில் வழக்கமாக அணியும்  தங்கப்பூச்சு கொண்ட கடிகாரமும் விரல்களில்…

மரணக்குழி

1 உறக்கத்தின் நடுவே போரோலத்தின் கதறல் கேட்டு விழிப்பு தட்டியது. இமைகள் இரண்டும் ஒட்டிக், கண்கள் திறக்க மறுத்தன. குழிக்குள் நான்கைந்து நாட்களாக உட்கார்ந்துக் கொண்டே தூங்கியதால் வந்த அயர்ச்சி. கண்களை நன்றாகத் திறந்தபோது மொத்த காடும் இருளால் சூழ்ந்திருந்தது. மூக்கின் முதல் சுவாச உணர்வு வந்ததும் மழை நீரில் பட்டு அழுகிய உணவின் வாடை…

ம்ருகமோக்ஷம்

1-காக தூதன்  முன்வினையின் காரணமாக பருந்தால் வேட்டையாடப்பட்டு பாதி உடலை இழந்த குருவியைக் காகம் ஒன்று பராமரித்துக்கொண்டிருந்தது. குருவியின் உயிர் விசை பாதி உடலிலும் பாதி வெளியிலும் கிடந்து அதிர்ந்துகொண்டிருந்தது துடியாக. காகம் உணவும் நீரும் குருவிக்கு அளித்து அதை நிழலில் கிடத்தி பார்த்துக்கொண்டது.  பிரக்ஞை மீண்ட குருவி காகத்தின் அருகாமையைக் கண்டு தன் இறுதிக்காலத்தை…

வெண்நாகம்

“டாக்டர்! நா திரும்ப அத பாத்தேன்… ரொம்ப கிட்டத்துல” அகிலின் கைகள் உதறின. வார்த்தைகளை வெளிவிடாதபடி ஏதோவொன்று தடுத்தது. அறையுள் நுழையும்போதே ஒருவித பதற்றத்தோடிருந்தான். ‘நான் உடனே தங்களைச் சந்தித்தாக வேண்டும்’ என்று அவன் குறுஞ்செய்தி அனுப்பியபோதே மருத்துவர் குணாவிற்கு ஏதோ அவனை உறுத்துவது விளங்கியது. அவனை நாற்காலியில் அமரச் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்.…

அணைத்தல்

கைப்பேசித் திரையில் முகத்தைப் பார்த்தபோது கண்ணிமைகள் தடித்துப் போயிருப்பது தெரிந்தது. இரண்டு மாதமாகவே சரியான தூக்கமில்லாமல் அலைகிறேன். சுகுமாறன் அங்கிள் மறுபடியும் வேலையில் சேர அழைத்ததற்கும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். இன்று அம்மாவுக்கு எப்படியும் குணமாகிவிடும் என எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கண்களைக் கசக்கி விட்டு அமர்ந்தேன். காலையிலேயே தூக்கம் குறித்த பயம்…

ஒப்புரவு

பாலம் ஏறிய சிறிது  தூரத்தில், இடது கை கட்டை விரலைக் கவிழ்த்து சைகை காட்டியபடி இருவர் நின்றிருந்தார்கள். தலைகவிழ்ந்த சாலை வெள்ளை விளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளைஞனும், ஒரு நடுத்தர வயது பெண்ணும்  தனித் தனியாக உதவி கேட்டது தெரிந்தது.  அவன் கையைக் காட்டிய விதமா அல்லது அவன் உடலில் தெரிந்த நிலைகொள்ளாத தன்மையா எனப்…

பூஜாஅன் ஹாத்திக்கு

1985 – ஆம் ஆண்டில் ஐந்தாம் படிவம் பயின்ற தமிழ்மொழிக் கழக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டி, அந்தக் காலகட்டத் தமிழ்மொழிக் கழக மாணவத் தலைவன் பாஸ்கரன் பழைய மாணவர்கள் வாட்சப் குழுவின் மூலம் அழைப்பு விடுத்திருந்தான். அந்தக் குரல் பதிவை எனக்கு அனுப்பி வைத்திருந்தாள் தனலட்சுமி. “வாட்சப் குழுவில் சேர்கிறாயா?” என்கிற கேள்வியும் உடன்…