உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB)- மலேசிய தேசிய இலக்கிய வெளியிலும் தமிழ் இலக்கிய வெளியிலும் புகழ்பெற்ற பெயர். ‘அவ்லோங்’ தைப்பிங்கில் (Aulong,Taiping) பிறந்து வளர்ந்த இவர், தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆங்கில மொழியிலும் இலக்கியம் படைக்கும் இவர் ‘Shafie Uzein Gharib’, ‘Hanumam 0’, ‘Leonard Loar’ ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார்.
ஆரம்பக் கல்வியை S.R.K Convent Aulongகிலும் இடைநிலைக் கல்வியை S.M.K Darul Ridwanனிலும் முடித்த இவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத் துறையில் பட்டம் பெற்றவர். ஆரம்பப் பள்ளியிலேயே கதைகளை வாசிக்கத்தொடங்கி, இடைநிலைப்பள்ளிகளில் கதைகள் எழுதத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளி இதழ்களின் பக்கங்களை இவரின் எழுத்துக்கள் அலங்கரித்துள்ளது.
Read more →