
வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் மொழிபெயர்ப்புக்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. மலாய் சீன சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதோடு மலேசிய தமிழ் சிறுகதைகளை மலாய் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மூன்று நூல்களை ஒரே நேரத்தில் பதிப்பிப்பதுடன் அவற்றை ஒட்டிய கலந்துரையாடல்களை உருவாக்கும் திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தில் ‘தமிழாசியா’ பதிப்பகமும் இணை…