Category: வல்லினம்

நகரில் ஒரு மூன்றடுக்கு மாளிகை

மூன்றடுக்கு மாளிகை என்பது அந்தத் தனித்துவமான கட்டிடத்துக்கு இந்நகர மக்கள் சூட்டியிருக்கும் சிறப்பு பெயர். அந்தப் பெயருக்கு ஏற்றது போல மூன்று மாடிகளைக் கொண்டது அக்கட்டடம். அந்த மூன்றடுக்கு மாளிகை எந்த யுகத்தில் கட்டப்பட்டது? அது உருவான வரலாற்றை எப்படிக் கூறுவது? இதன்  தலபுராணம் மலாயாவைப்  பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்திலிருந்து  தொடங்குகிறது.  அக்காலகட்டத்தில் அந்நியர்களைத்…

நிசப்தப் பொழுது

ஒரு மெல்லிய ஒலியிலிருந்தே அனைத்தும் தொடங்கியது. நள்ளிரவில் அந்த ஒலியை அவன் கேட்டான். எண்ணெய் குமிழ்கள் மெல்ல மெல்ல நீரின் மேற்பரப்பில் தோன்றி பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வண்ணமயமான கோளங்களாக அழகாக நீரில் பரவுவது போல் அமைந்திருந்தது அந்த ஒலி. கர முர கர முர ஒலி… தலை முடியைக் கோதிக் கொண்டு சோபாவிலிருந்து…

கோதுமை மணி

முட்டம் கிராமத்தில் இன்று மக்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. வழக்கத்திற்கும் மாறாக கடல் அலையின் உயரம் இன்று அதிகமாகவே இருந்தது. ஓயாதக் கடல் அலையும் கட்டித் தழுவும் அதன் உப்புக் காற்றும்தான் இம்மக்களுக்கு முதல் உறவு. அனைவரும் கடல் அலையைப் பார்த்தபடி கடற்கரை மணலில் அமர்ந்து சீமோனுக்காகக் காத்திருக்கிறார்கள். “சீமோன் மாமா வந்தாச்சா?” என்று…

நினைவின் மழை

மீண்டும் ஓர் மழைகாலம். இந்த முறை வேறொரு சாளரம். ஆண்டுக்கொருமுறை சாளரத்தின் வழியாகத் தெரியும் காட்சி மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. எங்கள் கல்லூரி அமைந்திருக்கும் கிண்டி சென்னையின் மத்தியப்பகுதியில் இருக்கும் சிறிய காடு என்றுதான் சொல்ல வேண்டும். கருமையான பெரிய தண்டுகளுடனான மரங்கள் செறிந்து நிறைந்த இடம். எப்போதும் இலைகள் விழுந்து செறிந்து மட்கிய…

ம் என்ற மரணம்

குளிரில் உறைந்தா; நெருப்பில் கருகியா; நீரில் மூழ்கியா? எப்படி நடக்க வேண்டும்? கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கலாம், ஆனால் அவள் வீட்டின் முன் கிணறு கிடையாது. சுருக்கிட்டுக் கொண்டு மரத்தில் தொங்கலாம் ஆனால், அவள் வீட்டின் முன் மரம் கிடையாது. விஷம் குடிப்பவர்கள் உண்மையிலேயே வாழவே விரும்புகிறார்கள். சம்பவத்துக்கும் மரணத்துக்கும் அதிக கால இடைவெளி…

நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது?

தீவிர இலக்கியம் அதன் வாசகர்களிடமிருந்து வெறும் நுகர்வைக் காட்டிலும் அதிகமாகக் கோரக்கூடியது — அதற்கு ஈடுபாடு, பொருள்கொள்ளுதல், சிக்கலான தன்மையுடன் ஊடாடும் விருப்பம் தேவை. நேரியல் முறையிலான கதைசொல்லல் மற்றும் உடனடி நுகர்வை வளர்க்கும் வெகுஜனப் புனைகதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் அடுக்குகள், பலபொருள்படும் தன்மை கொண்டது, பெரும்பாலும் எளிமையான புரிதலுக்கு மறுமுனையில் இருப்பது எனலாம்.…

நுண்மைகளின் கலைஞன்

தமிழாசியாவின் ஏற்பாட்டில் மாதந்தோறும் நடந்து வரும் சிறுகதை கலந்துரையாடலில் கடந்த ஜனவரி மாதம் எழுத்தாளர் வண்ணதாசனின் ‘தனுமை’, ‘சமவெளி’, ‘நிலை’, ‘தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்’ ஆகிய நான்கு சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வண்ணதாசனின் படைப்புலகத்தைப் பற்றிய எழுத்தாளர் ம. நவீனின் அறிமுகத்துடன் கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. வண்ணதாசன் படைப்புகளின் வாசிப்பனுபவம் சங்கப்பாடல்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கு…

புதிய எல்லையை நோக்கி

தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற…

மலேசியப் பயணம்

நடுநிலைப் பள்ளி பயிலும் வயதில் என் வகுப்பு நண்பன் அவனது மாமா மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அந்த வரியைச் செரிக்கவே முடியவில்லை. மலேசியா ஒரு ‘ஃபாரின் கண்ட்ரி’. வெளிநாட்டுக்காரர் ஒருவர் எப்படி எங்கள் ஊரில் இருக்கும் ஒருவருக்கு உறவினராக இருக்க முடியும்? அன்றைக்குப் புகழ் பெற்ற படமான ‘விதி’ திரைப்படத்தின்  நீதிமன்ற காட்சிகளில் நடிகை …

அப்பா

ஆங்கிலத்தில்: ரேய்மண்ட் கார்வர் தமிழில்: கோ.புண்ணியவான் உடலை மூடிய குளிர் உடையுடன் புதிதாகப் பிறந்த குழந்தை கட்டிலை ஒட்டிய தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். தொட்டில் புதிய வண்ணமிடப்பட்டு நீல ரிப்பனால் பூ போல முடிச்சிடப்பட்டு, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்று சகோதரிகளும், குழந்தையைப் பிரசவித்த களைப்புடன் முழுமையாய் பேறு நோயிலிருந்து விடுபடாத குழந்தையின் தாயும், குழந்தையின் பாட்டியும்…

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா : சில நினைவுகள் (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன)

எழுத்தாளர் அரவின் குமாருக்கு இளம் எழுத்தாளர் விருது வழங்குவது குறித்து நண்பர்களிடையே எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. 2020க்குப் பின்னர் எழுத வந்தவர்களில் அரவின் குமார் தனித்துவமானவர். புனைவு, அ-புனைவு என இரண்டிலும் இடைவிடாது இயங்குபவர். அவரை ஊக்குவிப்பதும் அடையாளப்படுத்துவதும் வல்லினம் குழுவின் பொறுப்பு என்பதை அனைவருமே அறிந்திருந்தோம். விருது வழங்குதல் என்பது பணத்தையும் பரிசையும்…

மேலே திறந்து கிடக்கிறது…

”ஒரு விந்தை!” என்று ராபர்ட் கோல்ட்மான் சொன்னார். கண்ணில் நுண்நோக்கியுடன் ஒரு கல்படிவத்தின்மேல் குனிந்திருந்த ராம்கோவிந்த் தலைதூக்கி புருவத்தை மட்டும் தூக்கினார். “இதைப்பாருங்கள்,” என ராபர்ட் கோல்ட்மான்  ஒரு சிறிய கல்லை நீட்டினார். அது ஒரு பெரிய சேற்றுப்படிவப் பாறையில் இருந்து உடைந்த கீற்று. மங்கலான  சிவந்த நிறத்தில் ஒரு சிப்பி போலிருந்தது. “படிமமா?” என்றபடி…

ஒருவரின் வாழ்க்கை முறை

நீ காத்திருந்தது கடல் நீருக்காகவா அலையும் மணலும்  இடைவெளியின்றி அசைகின்றன உனக்குத் தெரியும் இறுதியில் உடைவது கடல் நீரல்ல உன்னால் மறக்க இயலாது. பேரமைதியும் இளமையும் வனப்பும் பரிசுத்தமும் ஒருங்கே அமைந்தவள் அவள். பசுமையான மாணிக்கத்தின் தன்மையை ஒத்திருந்தாள் யூ சியாவ் யூ. உன்னால் அந்த ஜீவனை மறக்க முடியாது. அவள், தான் ஒரு பெண்…

வண்ணத்துப்பூச்சிகளின் வீடு

அந்த ஐந்து மாடி மலிவு விலை அடுக்குமாடியின் படிகளில் இறங்கி வரும்போது சுவரில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சி அஸ்லியின் கண்ணில் பட்டது. அதன் கோர முகம், அழகிய சிறகுகளுக்குப் பின்னால் மறைந்திருந்தது. அதன் சிறகில் வண்ணக்கோல திட்டுகள் சுழன்று கொண்டிருப்பது போல தோன்றியது.  அது சுவரில் ஒட்டிக் கொண்டு அசையாமலிருந்தது. அசைவற்ற அதன் தன்மை அது இறந்துவிட்டதோ…

ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்

என் வாழ்நாளில் மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் எப்போதுமே  அறிந்திருக்கவில்லை. இளமையில் பசியோ வேதனையோ உடலில் தூலமாக  உணர்ந்ததைபோல அதை நான் உணர்ந்ததில்லை. சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்திருந்த தருணங்கள் உண்டு. கரிசல் காட்டின் அந்தியில் வானம் சிவக்கும்போது சில சமயங்களில். அதையும் சிறுவயதில் அச்சத்துடன்தான் கண்டிருக்கிறேன். மொத்த வானமும் தலைக்கு மேல் தீப்பற்றி எரிவதுபோல…