
தமிழாசியாவின் 31ஆவது சந்திப்பு ஆகஸ்டு 8 ஆம் திகதி நடைபெற்றது. இம்முறை பிரமிள், சம்பத், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோர் எழுதிய நான்கு கதைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. சந்திப்பின் தொடக்கத்தில் பிரமிளின் கவிதைகள் குறித்துப் பேசப்பட்டது. அவர் படிமங்களைப் பயன்படுத்திப் படைப்புகளை உருவாக்கும் கவிஞர். இருத்தலியல் மூலம் ஆன்மீகத்தை அடையும் அவரது படைப்புகள் அடையும் வழிகளை வாசகனால்…














