Category: கட்டுரை

வாட்டர்: கனவுகளை மூழ்கடிக்கும் புண்ணிய நதி

இந்திய சமூகத்தில் விதவைகள் எந்த நிலைமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும், அந்த அவலம்  வேத சாஸ்திரத்தைக் கொண்டு சமூகத்தின் மத்தியில் எவ்வாறு ஆழமான  நம்பிக்கையாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது ‘வாட்டர்’ திரைப்படம். சர்ச்சைக்குரிய படைப்பாளி என்று கூறப்படும் இந்தோ-கன்னடியரான இயக்குனர் தீபா மேத்தாவின் இயற்கை கூறுகள் வரிசை கொண்ட (element trilogy) மூன்றாவது படமாக ‘வாட்டர்’…

வரலாற்றிலிருந்து வாக்கு மூலங்கள்

நினைவுகளைப் பதிவு செய்வது ஒரு கலை. இக்கலை வடிவத்தை ‘நினைவுக்குறிப்பு’ (memoir) என்கிறோம். இது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இலக்கியத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புனைவு இலக்கியம். மற்றொன்று புனைவில்லா (அல்புனைவு) இலக்கியம். சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என கற்பனை கலந்த அனைத்தும் புனைவுகள் வகையைச் சார்ந்தது. சுயசரிதை, நாள்குறிப்பு, நினைவுக்குறிப்பு…

‘கலைக்கு வயதாவதில்லை’ – ஆர்தர் பொர்மன்

சுற்றிலும் செடி கொடிகள், வானுயர வளர்ந்த மரங்கள், சலசலத்து ஓடும் தெளிந்த நீரோடை. வீடோ முற்றிலும் மூங்கில்களால் ஆனது. இயற்கைதான் இங்கே ஜீவ நாதம். கூச்சிங் நகரத்திலிருந்து ஒரு மணி நேர காரில் பயணம். சரவாக் என்றாலே நீண்ட வீடுகளின் கலாச்சாரம், இசை, நடனம், உணவு, வாழ்க்கை முறை என முற்றிலும் மாறுபட்ட சூழல். அது…

காலம் தந்த கருப்பினக் கவிதைகள்

“மனித இனம் தோன்றிப் பெருக ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை அடிமைப்படுத்த விழையும் போராட்டமும், அடிமைப்படுவதிலிருந்து விடுபட விழையும் போராட்டமும் ஒரு சேர நடந்துகொண்டுதான் இருக்கிறது. மனித இனம் இருக்கும்வரை இப்போராட்டமும் இருக்கும்” – எழுத்தாளர் இமையம் ஆப்பிரிக்கக் கவிதைகள் லூசி தெர்ரி (1730-1821)–இல் இருந்து தொடங்குகிறது. ஆனாலும் பிலிஸ் வீட்லீ (1753-1784) என்பவர் எழுதிய “Poems on…

அபத்தங்களைப் பேசுதல் கூடாதா..?

பத்திரிகைகளில் எனது படைப்புகள் வரத்தொடங்கிய காலம். பெரும்பாலும் நகைச்சுவை துணுக்குகள்தான் எனக்கு சுலபமாகக்  கை கொடுத்தன. நண்பர்களுடனான உரையாடலில் இருந்தும் வீட்டிலும் உறவினரிடத்திலும் கிடைத்த நகைச்சுவை உரையாடல்களையும் கொஞ்சம் மாற்றி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளியில் பிரசுரமான படைப்புகளை காட்டி, பள்ளிக்கு வெளியிலாவது நான் கெட்டிக்காரனாக இருக்க வேண்டியிருந்தது. இப்படி வளர்ந்த என் எழுத்து…

இருள் எனும் நிழல்

தமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பது என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படலாம். பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழியைச் செவ்வியல் என்கிறோம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 4

கடந்த தொடரில் பெண்ணும் அவநம்பிக்கையும் எப்படி ஒன்றோடு ஒன்று செர்த்து பிணைக்கப்படிருக்கின்றன என்பதை பற்றி பார்த்தோம். இத்தொடரும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படும் இயற்கை உபாதை எப்படி சில நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது என்பதை பார்ப்போம். உலகை ஒரு பெண் தாய்மை அடைய வேண்டுமாயின் அவளுக்கு மாதவிடாய் கண்டிப்பாக எற்பட்டிருக்க வேண்டும். தாய்மையுடைய முதல்…

Turnitin: மிரட்டலும் மீட்பும்

கட்டற்ற தகவல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இணைப்புகளாக அறிவுத்திருட்டு (plagiarism) மற்றும் முறையான மேற்கோள் (proper citation) ஆகியவை திகழ்கின்றன. இவை இரண்டையும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், கைவரப்பெறவும் உருவாக்கப்பட்ட மென்பொருளே Turnitin. ஆனால் ஆய்வாளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஆய்வு மாணவர்களின் மத்தியில் Turnitin வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு…

காக்கா முட்டை: கலையும் அரசியலும்

மிக அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது ‘காக்கா முட்டை’ திரைப்படம் எடுத்தப் பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அழைத்துச்சென்றனர். ஒருவகையில் இந்தப்பயணம் எனக்கு முக்கியமானது. ஒரு கலைப்படைப்பு எதை மக்களுக்குக் காட்ட விளைகிறது என்பதும் அதன் தேர்வு எதுவாக இருக்கிறது என்பதும் இந்தப்பயணம் சன்னஞ்சன்னமாக உணர்த்தியது. கலை என்ற பெயரில் அதன் உன்னதங்களை…

ஆய்வுகள்

மனித இனத்தின் பண்பாடுகளும் நாகரீகங்களும் இதர அனைத்தும்கூட மனிதனுடைய தேடல் வெட்கையிலிருந்தே உருவாகியிருக்கின்றன. புதியதாக ஒன்றை உருவாக்குவதாயினும் அல்லது ஒன்றின் மெய்த்தன்மையை கண்டடைவதாயினும்; அறியாத ஒன்றிலிருந்து அறிந்த ஒன்றை நோக்கி நகர்த்துவதே அறிவின் தேடலாக அறியப்படுகின்றது. இதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஆய்வு’ எனும் சொல்லை கொள்ளலாம். அறிவைத் தேடுதலே ஆய்வாகின்றது. ஒன்றை அறிய அறிய அறியாமையின்…

இளம் பருவத்துத் தோழி – முகமது பஷீர்

பல காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய கால சகி) நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை. நாவலில், காதல், அன்பு, ஏக்கம், கவலை, வறுமை என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் நெஞ்சைப் பிழியும் வலியும், துயரமும், வறுமையும் கதை முழுவதும் இருக்கிறது. மஜித்,…

அண்மைக்காலச் சிறுகதைகள்

மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும்.…

பேனாவை முறிக்கும் அதிகார கரங்கள்

படைப்புலகம் கலை நயமும் அழகியலும் சார்ந்தது என்றாலும் அது விட்டுச் செல்லும் தாக்கமானது அதிகார வர்க்கத்திற்கு எப்போதும் அச்சுறுத்தல் தருவதாகவே இருக்கிறது. தீவிர நிகழ்த்துக் கலைகளாக இருந்தாலும் இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அது அதிகார வர்க்கத்தின் பொதுபுத்தி சார்ந்த போக்குகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் சவால் விடுவதாகவும் மாற்றுச் சிந்தனைகளை முன்னெடுப்பதாகவும் இருப்பதால்தான் அரசுகள் படைப்பாளர்கள் மேல் அவ்வப்போது…

சாதி மயிர்

“ஆசிரியருக்கும் முடிவெட்டறவருக்கும் என்ன வித்தியாசம்..?” “ஆசிரியர் பிழை திருத்துவார் முடிவெட்டறவர் முடி திருத்துவார்..” சமீபத்தில் சில மாணவர்களைக் கடக்கும் போது அவர்கள் பேசியது எனக்கு சிரிப்பை வரவைத்தது . இதனை கவனித்த இரண்டு மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இடத்தைவிட்டு மெல்ல மறைந்தார்கள். தற்போது பணி நிமித்தம் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.…

இல்லாத திசைகள் 5 – முதல் முழு சம்பளம்

பாடாவதி ஓவியரிடமிருந்து தப்பித்து வார இதழ் ஆசிரியரின் தம்பி நடத்திவந்த நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தேன். மறக்க முடியாத வருடங்கள் அவை. அங்கு வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளத்தை வாங்கிய நாள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. ஒரு வெள்ளைக் கவரில் சம்பள பணத்தைப் போட்டு கொடுத்தார்கள். கவரின் மேல் என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கவரைக்…