Category: விமர்சனம்

புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ்: ஒரு பார்வை

வல்லினம் ஜூன் 2007 முதல் மலேசியாவிலிருந்து  வெளிவரும் ஒரு முக்கியமான இலக்கிய இதழ். தொடக்கத்தில் அச்சிதழாக வரத் தொடங்கி 2009 முதல் இணைய இதழாகியுள்ளது. இதுவரை 51 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உருவானதைக் குறித்த ஒரு சுவாரஸ்யமான கட்டுரை இணைய இதழின் முகப்பில் உள்ளது. ஒரு இலக்கிய இதழைத் திட்டமிட்டு நடத்துவதில் உள்ள ஆர்வம்,…

அரவின்  குமாரின் சிறுகதைகள்: சில குறிப்புகள்

அனைவரிடமும் சொல்வதற்குக் குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் என்பார்கள். இருந்தாலும் அதைச் சொல்லத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு, அப்படிச் சொல்ல முனைபவர்களுக்குத் தேவை மொழியறிவு. சொல் தெரிவு மற்றும் சொற்சேர்க்கை, வாக்கியத்தைச் சரியான முறையில் அமைக்கத் தெரிந்திருப்பது. ஒரு மொழியில் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதி இது எனலாம். இத்தகுதி இருந்தால் எழுதுபவன் தான் கருதுவதில் கணிசமான…

இந்துஜா சிறுகதைகள்: தெப்பக்குளத்தில் தேங்கிய நீர்

இந்துஜா ஜெயராமன் மலேசிய தமிழ்ப் புனைவுலகத்தின் அண்மைய வரவு. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நாவல் ஒன்றையும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுத் தனக்கென இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் என ஒரு சிலரால் புகழ் மாலைகள் சூட்டப்பட்டும் வருகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஜெ.இந்துஜா ஜெயராமன் சிறுகதைத்…

மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதவந்த லதா கவிதைகளில் கால்பதித்தார். தொடர்ந்து கதைகளும் எழுதத் தொடங்கினார். தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உறவுகளும், ஈழத்துத் தமிழர்களுக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உள்ளன. சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கையும் அவ்விதமே. என்றாலும் தமிழர்களின் பொதுப் பண்பாடு நம் வாழ்க்கையில் வலுவாகவே இதுவரை இருந்து வருகிறது.

நகர்ந்து கொண்டேயிருக்கும் உயிருள்ள கோள்

லதாவின் ‘யாருக்கும் இல்லாத பாலை’ யின் கவிதைகளை ‘பொருள் மயக்கின் அழகியல்  (Aesthetics of ambiguity)’ என்று அடையாளப்படுத்துகிறார் எம்.ஏ.நுஃமான். கூடவே, ‘நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதைகள்’ எனச் சொல்லும் அவர், இதைக் கண்டடைந்ததற்கான வழித்தடங்களையும் இந்தத் தொகுதிக்கான பின்னுரையில் குறிப்பிடுகிறார். லதாவின் உணர்தல் தீவிர நிலை, சாதாரண நிலை, அதி தீவிர நிலை…

அடுத்த அறுவடைக்கான உரமிட்ட மண்

‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்: வரலாறும் புனைவும்’ என்ற கட்டுரைத் தொகுதி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிவானந்தம் நீலகண்டனால் படைக்கப்பட்டுள்ளது. முதலாவது சிங்கைநேசன் தமிழ் வார இதழின் தரவுகளின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் சிங்கைத் தமிழர்களின் வாழ்வியல் பதிவு. அடுத்தது சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவின் பதிவு.  

எம்.கே குமார் சிறுகதைகள்

தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் தமிழ் இலக்கியம் தொடர்ந்து நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியம் என்று தனித்த அடையாளங்களைப் பெறுவதில் இன்றும் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் படைப்புகளை ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பெருநிலங்களில் குடியேறிய தமிழ் எழுத்தாளர்களின் புலம்பெயர் இலக்கியங்களோடு ஒப்பிட்டு…

வாடாமல் வாழும் வாழைமரங்கள்

சிங்கப்பூரில் 1942 தொடங்கி 1945 வரை நீடித்த ஜப்பானியராட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லிச் செல்கிறது வாழைமர நோட்டு. அந்த மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியராட்சி வரலாற்றின் இருண்டப்பக்கங்களையும் அவலங்களையும் முன்னிறுத்தி பேசுகிறது இந்த நூல். சரியாகச் சொல்வதென்றால் அந்த வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் இணைத்து மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் இந்நூலின் வழி அதன் ஆசிரியர் ஹேமா பேசுகிறார்.…

ஒளியாலான கதைகள்

சித்துராஜ் பொன்ராஜ் என்ற எழுத்தாளரை நான் அறிந்துகொண்டது 2016இல். சிங்கப்பூர் இலக்கியங்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொடர் விமர்சனக் கட்டுரைகளின் வழி சித்துராஜின் ‘மாறிலிகள்’ தொகுப்பு கவனம் பெற்றது. ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரை முக்கியமானது. தொகுப்பில் இருந்த சிறுகதைகளை ஒட்டிய ரசனை விமர்சனம் அன்றி, சித்துராஜ் என்கிற எழுத்தாளரின் வருகை சிங்கப்பூர் இலக்கியத்தில் எவ்வகையில்…

ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்

புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று…

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது…

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

“அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது… ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது… ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும்…

மலேசிய நாவல்கள்: ஒரு தீவிர வாசகனின் மறைக்கப்பட்ட குரல்

கடந்த ஆண்டு கோவிட்19 நோய்க் காரணமாக நாடு திடீர் முடக்கத்திற்கு உள்ளாகியிருந்த காலகட்டத்தில் ம.நவீன் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியிருந்தார்.  தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதி சுடச்சுட என் வாசிப்புக்கு அனுப்பி வைப்பார். நானும் அதே வேகத்தில் அந்தக் கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்து என் கருத்துகளை குறிப்பிட்டு அனுப்புவேன். அதில் சில விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன.…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி,  விமர்சன அளவுகோல்  மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின்…

மனசை ஆய்ந்த மனசிலாயோ!

பயணங்கள் மிகச் சுவாரசியமானவை. அவ்வப்போது நம்மை  எதார்த்தத்திலிருந்து தப்பிக்கச் செய்து, நமக்கே நம்மை யாரென்று அடையாளங்காட்டி மீட்டெடுப்பன. இந்தச் சுழற்சி இப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் மனிதனால் தன்னியல்பில் செயல்பட முடிகின்றது. பயணங்கள் நின்று போனால், மனம் இறுக்கமுறும். அதன் நீட்சியாகச் செயல்பாடுகளில் சிக்கல் நேரும். உளவியல் சார்ந்த எதிர்பாரா சம்பவங்கள் நிகழும். இவையெல்லாம் நாம் கடந்த ஓராண்டு…