மாரிட்ஜானின் உடல்

அந்தியில் நாங்கள் கினரெஜோவுக்குச் சென்று சேர்ந்தபோது கிராமத்தின் பெரும்பாலான மக்கள் கீழே பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். செல்லும் வழியெங்கும் அடர்ந்த காட்டிற்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக மின்னித் துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் குழுவில் மூத்தவரான எண்பது வயது கடந்த ம்பாஹ் சுரக்ஸோ கூட தன் வாழ்நாளில் அதுவரை இத்தனை மின்மினிகளைப் பார்த்ததில்லை என்று வியந்தார். இருள்…

வருடல்

சிரம்பானில் ‘முருகம்மா’ என்ற பெயரில் ஒருவரைத் தேடுவதென்பது சிரமமான காரியமாக இருக்காது என்றுதான் நினைத்திருந்தேன். முருகம்மா என்ற பெயர் உள்ளவர்கள் நிச்சயம் மிகக் குறைவானவர்கள்தான். அதுவும், என் தலைமுறையிலோ அதற்கடுத்த தலைமுறைகளிலோ பிறந்தவர்களுக்கு நிச்சயமாக முருகம்மா எனப் பெயர் இடப்பட்டிருக்க வாய்ப்பிருக்காது என்பதால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், யாரிடம் சொல்லித் தேடுவது என்பதில் தொடங்கி எதையெல்லாம்…

தாரா: அனைத்து புத்தர்களின் தாய்

மனித வரலாற்றின் பரிணாமத்தில், பெண் தெய்வ வழிபாடு காலங்கள் கடந்தும் மாறாமல் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பெண் தெய்வ வழிபாடு மனித நாகரிகங்கள், கலாச்சாரங்கள் நம்பிக்கை போன்றவற்றைச் சார்ந்த அமைப்புகளை வடிவமைத்ததில் முக்கிய அம்சமாகவே இருந்துள்ளது. வெவ்வேறு பெயர்கள், முகங்கள் சின்னங்களால் அடையாளப்படுத்தப்பட்டாலும், இந்த மரியாதைக்குரிய போற்றுதல் அனைத்தும் பெண் புனிதமானவள் என்ற ஒரு புள்ளியிலே…

சுகர் டாடி

அம்மா இறந்து இதோடு நான்கு மாதங்கள் ஆகிறது. நான் இன்னும் அம்மாவுடைய கடைசி காதலன் வீட்டில் தான் இருக்கிறேன். அவர் மிகவும் நல்லவர். என்னை அவர் வீட்டில் இன்னமும் வசிக்க அனுமதிக்கிறார். எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறை இன்னும் எனக்கானதாகவேதான் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து இம்மாதிரி பல வீடுகளின் அறைகளில் தங்கியிருக்கிறேன். அம்மா அவருடைய அப்போதைய…

கு. ப. ராஜகோபாலன் சிறுகதைகள்

தமிழ் நவீன சிறுகதை உலகின் முன்னோடிகளாகத் திகழும் புதுமைபித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி.ராஜநாரயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, ல.ச.ரா, ஜி.நாகராஜன், யுவன் சந்திரசேகர் எனப் பலரின் சிறுகதைகள் தமிழாசியா ஏற்பாட்டில் நிகழும் கலந்துரையாடலில் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்திருகின்றன. அவ்வகையில் கடந்த ஜூன் 29 எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் 4 சிறுகதைகளைக் குறித்த…

மெளனியின் சிறுகதைகள் உரையாடல்கள்

தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு சந்திப்பு தொடர்ந்து மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை பதினைந்தாவது சந்திப்பாக நவீன தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட மெளனியின் நான்கு சிறுகதைகளைக் குறித்துக் கடந்த 17.8.2024 மாலை 3.00 மணிக்கு மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்தில் கலந்துரையாடினோம். மெளனி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய இயற்பெயர் எஸ்.மணி…

எழுத்தாளர் அம்பை சிறுகதைகள்

சி. எஸ். லட்சுமி என்ற அம்பை தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். பெண்களின் உலகை வெளிக்கொணரும் வகையில் தன் படைப்புகளைப் பல்வேறு பரிமாணங்களில் படைத்துச் சென்றுள்ளார். அம்பையின் சிறுகதை உலகம் ‘கலைமகள்’ இதழில் தொடங்கியது. பெண்களின் மனநிலை, துயரங்கள், வாழ்க்கையை அவர்கள் எதிர்க்கொள்ளும் விதத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதினார். ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’…

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்

‘கொடை மடம்’ தமிழில் கவிதை, சிறுகதை எழுதுபவர்களில் ஒருவரான எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களின் முதல் நாவல். வித்தியாசமான வடிவம் கொண்ட நாவல் இது. அத்தியாயங்கள், உபகதைகள் என இரு சரடாக இந்நாவல் பகுக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்களாக உள்ளவை முகுந்தன் மற்றும் ஜென்னி இருவருக்குமான காதலைக் கூறுவதாகவும் உபகதைகள் பல்வேறு அமைப்புகளாகச் சிதறுண்ட மார்க்சிய லெனிய (மா.லெ) அமைப்புகளில்…

தேவதைகளற்ற வீடு: ஒளிந்து விளையாடும் கதைகள்

மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர் கே. பாலமுருகன். ஈராயிரத்தின் மத்தியில் புனைவுகளை எழுதத் தொடங்கிய அவர், சிறுகதை வடிவங்களில் நிகழ்த்திய பரிட்சார்த்த முயற்சிகளாலும் அதுவரை மலேசியத் தமிழ்ப் புனைவுகளில் அதிகம் வெளிப்படாத விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை எழுதியதாலும் உடனடியான கவனத்தைப் பெற்றார். தோட்டப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்து பெருநகருக்குள் நுழைபவர்களின் அகநெருக்கடிகளையும்…

ஜொக்ஜாவில் அடைமழை

அவனைப் பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. அதாவது, ஜமாலி தன் கல்வியை முடித்த பிறகு, கலை, பண்பாடு தொடர்பான அமைச்சில் வேலைக்குச் சேர்ந்தான். பல்கலைக்கழகத்தில் அவன் விவசாயத்துறையில் படித்திருந்தான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். ஆகவே, கலை பண்பாட்டுத் துறையில் வேலைக்குச் சேர்ந்தபோது அவன் மூளை காலியாக இருப்பது போல உணர்ந்தான். ஜமாலி,…

கிருஷ்ணை

நான் தங்கியிருந்த ஹாஸ்டலின் வெளியே நீண்டிருந்த பச்சை மாமரத்தின் சிறு கிளையின் மேல் அமர்ந்து கொண்டு ஒரு கருங்குயில் கூவியது. அவ்வொலி மிக அருகில்தான் கேட்டது. முழு மாமரமும் தெரியும் ஜன்னலைக் கொண்ட அறை அது. நீண்டு வளர்ந்து பெருத்திருந்த மாமரக் கிளை மட்டும் என் அறையைத் தொடும் வரை வளர்ந்திருந்தது. அங்கே தான் அந்தக்…