இந்தப் பொழுதில் இங்கே தனியாகநிற்கிறோம். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து நரம்புகள் வெலவெலத்தன. உய்யென்று காற்று சத்தத்ததோடு கடந்து செல்லவும் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அக்காவும் நானும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் கேம்பிலிருந்து தப்பித்து வந்திருந்தோம். எங்களைப் பார்த்த இடத்தில் ஐஎன்ஏகாரர்கள் சுட்டுவிடலாம். ஜப்பான்காரன் கழுத்தை வெட்டி இந்த தேக்கா பாலத்தில் கண்காட்சி வைப்பான். “ஐஞ்சாம் படைக்கு…
ஓர் அழகியின் கதை
முடிவின்மையின் வடிவம்
நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை.
பசித்திரு தனித்திரு விழித்திரு
1 வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது. எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய…
சிண்டாய்
“நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற திரள் ஒன்றைப் பார்த்தோம். அப்போது சஹாக் சித்தி நூர்ஹாலிசாவின் சிண்டாய்லா பாடலைப் பாடிக் கொண்டிருந்தான். ‘என் தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது, கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகளை அவன் பாடும் போது எனக்கு ஒருவித எரிச்சலாக…
நான்னா
இன்று எங்கள் நான்னாவிற்கு சாமி கும்பிட்டோம். என் மனைவி உயிரோடு இருந்தவரை, ‘உகாதிக்கு’ முதல் நாள் கொண்டாடப்படும் ‘நூக்கால்தல்லி’ திருநாளுக்கு வருஷம் தவறாமல் எனது பெற்றோருக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டாள். இவ்வளவுக்கும் அவள், என் பெற்றோரை பார்த்ததுகூட கிடையாது. ஆயினும், ஒரு நல்ல மருமகளாய் வருஷந்தவறாமல் அவர்களை வணங்கி வேண்டினாள். “ஒரு படம் கெடைச்சா…
ஞமலி
மோப்பம் பிடித்தபடி கண் முன்னே திரிந்து கொண்டிருந்தவன், எதிர்வீட்டு வாயிற் கதவோரம் எப்போது காலைத் தூக்கினான் என்றே தெரியவில்லை. காலணி ஒன்று பறந்து வந்து இரும்புக் கதவில் மோதி எழுப்பிய சத்தத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டு ஓரடி பின் வாங்கி குரைத்தான். பின்னர் முன் கால்களை படுக்கவைத்து பிட்டத்தை தூக்கியபடி காலணியைப் பார்த்து வாலை ஆட்டத்தொடங்கினான்.…
கோணல் பிரார்த்தனை
‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்
பழங்குடியினரின் சிறப்பு அம்சமாக திகழ்வது அவர்கள் வாழும் சுற்றுச் சுழலே ஆகும். அவர்கள் வாழும் இடமானது எப்பொழுதும் பல்லுயிரியம் மிகுந்த வளமான ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், தற்காலத்தில் அவ்வாறான இடங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து கொண்டே வருகின்றன. பழங்குடி மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்க்கை அமைப்புக்கு முற்றிலும் விரோதமான ஒரு சுற்றுச்சூழலை எதிர்…
இறுதி சாகசம்
என்னுடைய அப்பாவழித் தாத்தாக்கள், அப்பாவின் அப்பாவும் சித்தப்பாவும், பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்டனர். இருவரும் சிறுவயதிலிருந்தே எந்த வேலையையும் சொந்தமாகக் கற்றுக்கொள்வதில் தேட்டையாக இருந்தனர். பதின்மவயதிலேயே எண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினர். அதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஒரு செக்குக் கட்டையும் ஒருஜோடி மாடும் போதும். குலத்தொழில்தான் என்றாலும் அவர்கள் தொழிலுக்குப் புதிது.
2020இன் இறுதியில்…
இவ்வாண்டின் இறுதி இதழ் இது. வல்லினத்தின் 126ஆவது இதழ். சமகால நாவல்களின் சிறப்பிதழாக வெளிவருவது அதன் கூடுதல் சிறப்பு. இணையம் வழி இலக்கிய இதழை வழி நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் உள்ளன. முதலாவது, படைப்பாளர்களின் மனநிலை சார்ந்தது. ‘இணைய இதழ்தானே…’ எனும் எளிமைப்படுத்திக்கொள்ளும் மனப்போக்கு. அடுத்ததாக இதழாசிரியர்களின் மனநிலை. கிடைத்ததை கொண்டு நிரப்பி வெளியிட்டால்…