இலக்கிய வடிவங்களில் மிக அடர்த்தியான கவித்துவமும் அழகியலும் படிமங்களும் கொண்டது கவிதை. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ அதன் வாசகப் பரப்பு மிகச்சிறிய எண்ணிக்கையிலானது. ஏன் இந்த முரண்? ஏனெனில் கவிதை அகவயப் பொருள். மௌனத்தின் மொழி. அது அவன் காயத்தை ஆற்றும் மருந்து. அவன் காதலை அவனே திரும்பச் சொல்லிக்கொள்ளும் பரவசப் பதிவு. அவன் ஆற்றாமையை…
பூங்குழலியின் கவிதைகள்
முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அவன் விட்டுவிட்ட இடங்களை நிரப்ப வைப்பதும் கவிதையின் செயல்பாடாகப் பார்க்கிறேன். இன்னொன்றையும் இங்கு…
அன்பழகன் செந்தில்வேல் கவிதைகள்
கனவுச் சாலையில் பொடி சொற்கள்
ஒரு நிகழ்வு நம் மன உணர்வைத் தாக்கும்போது, அதன் பாதிப்பு சொற்களாய், செயல்பாடுகளாய் வெளிப்படுவது இயல்பு. அவ்வகை நிகழ்வு ஒரு படைப்பாளனைப் பாதிக்கும்போது, அதுவே ஒரு கலைப்படைப்பாய் உருவாகிப் போகும். தனக்கு ஏற்படும் நிகழ்வை ஒரு ஓவியன், ஓவியக் கண் கொண்டு ஓவியமாக்குகிறான். கதை சொல்லும் கதைசொல்லி அதைச் சிறுகதையாகவோ அல்லது நெடுங்கதையாகவோ படைத்தளிப்பான். ஒரு…
தகவல் கற்றறிவு திறன்
விரைவான தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றம் மற்றும் தகவல் வளங்களின் பெருக்கம் அதிகரித்திருக்கும் இச்சமகால சூழலில் தகவல் கற்றறிவு திறன் மிகவும் முக்கியமானதாகும். தகவல் கற்றறிவு திறன் தனியாக இயங்குவதில்லை. அது சில திறன்களின் தொகுப்பாகவே செயல்படுகிறது. படிக்கும் திறன், எழுதும் திறன், வாசிக்கும் திறன், கணினியை இயக்கும் திறன், டிஜிட்டல் பொருட்களை இயக்கும் திறன் என…
“இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வாசகர் மிகவும் முக்கியமானவர்” – ந. முருகேசபாண்டியன் (பாகம் 2)
தமிழில் ஏன் கோட்பாட்டு ரீதியான விமர்சனங்கள் வருவதில்லை? தமிழில் தொல்காப்பியரின் தொல்காப்பியம் காத்திரமான விமர்சனத்தை உள்ளடக்கியுள்ளது. கிரேக்கத்தில் அரிஸ்டாடில் போல தொல்காப்பியர். ஆனால் அந்த விமர்சன மரபு வளர்க்கப்படவில்லை. வைதிக சமயத்தின் ஆதிக்கம் காரணமாகப் புத்தகம் என்றால், அது கேள்விகளுக்கு அப்பால்பட்ட நிலையில் புனிதமாகக் கருதப்பட்டது. புத்தகத்தைப் பற்றி ரசனை முறையில் நலம் பாராட்டுதல்தான் தமிழில்…
வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 3
பிப்ரவரி 7, 2016 ஞாயிற்றுக்கிழமை – [இரண்டாம் நாள்] ஆறாவது அமர்வு : என்னை நாயென்று கூப்பிடுங்கள் நூலாசிரியர் : சிவா பெரியண்ணன் நூல் விமர்சனம் : கோ. புண்ணியவான், பூங்குழலி வீரன் நேரம்: காலை 9.30– 11.00 வரை இக்கவிதை நூல் தொடர்பாக கோ.புண்ணியவான், பூங்குழலி வீரன் இருவரும் எழுதியிருந்த விமர்சனக் கட்டுரைக்கு அப்பால் உள்ள விடயங்கள் குறித்துப் பேசுவதாக அமர்வு முன்னகர்த்தப்பட்டது. அவ்வகையில் சிவா பெரியண்ணன் கவிதைகள் குறித்த…
ஆசிரியர்களின் பணிச்சுமையும் அதன் அரசியலும்!
2016-ஆம் ஆண்டு பள்ளித்தவணை தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்துவிட்டன. ஆசிரியர்கள் ஓட்டப்பந்தய வீரர்கள் போல் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு குறுகியதூர ஓட்டப்பந்தயம் போல் பரபரப்பான சூழலில் அவர்கள் வாழ்க்கை மின்னலாய் ஓடி மறைகிறது. அந்தப் பரபரப்பில் அவர்கள் பெறுவதும் இழப்பதும் கவனிக்கப்படாமல் மறைந்து போகிறது. அவற்றில், வாழ்க்கையின் பல அற்புதத் தருணங்களும் கரைந்துபோகின்றன. மீட்டெடுக்க…
கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும்!
சட்டப்படி குற்றமாகும் கொலைகளுக்கெல்லாம், சட்டப்படி தண்டனை கிடைக்கிறதா? அல்லது கொலைகள் நியாயப்படுத்தப்பட்டு, சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை குறைக்கப்படுகிறதா? மண், பொன், பெண், ஆகிய மூன்று பழங்குடிக் கோட்பாடுகளைக் காக்கும் கடமையில் இருப்பதாக நம்பிக்கொண்டு வாழும் குடும்பங்கள், குடும்பத் தலைவர்கள், கௌரவக் கொலை என்ற பெயரில் பெண்கள் சமுதாயத்தை அணுவணுவாகக் கொன்று தின்ற பிறகு, மதம் அல்லது பாரம்பரியத்தைக் காரணம் காட்டிச் செய்த…
Information Anxiety – தகவல்கள் தொடர்பான கலக்கம்
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படியொரு சொல் வழக்கில் இருப்பது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் இருக்கலாம்; அல்லது பொதுவாக மன அழுத்தம், குழப்பம் என்ற சொற்களின் வழியாக இதனைக் கடந்து சென்றிருப்போம். ஆனால் இதனை வாழ்வில் ஒரு முறைகூட அனுபவிக்காத ஆய்வியலாளர்களும், மாணவர்களும் இருக்கவே முடியாது. தற்போதைய சூழலில் சிறு பிள்ளைகள்கூட தகவல்கள் தொடர்பான கலக்க நிலையினை எதிர்கொள்வதாக…
காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள்
பொதுவாக பெண்களைவிட ஆண்களே கூச்சசுபாவம் மிக்கவர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் மட்டும் இருக்கையில் அவர்கள் வீரத்தைக் குறித்து சவடால் பேசுவதும் அதுவே ஒரு பெண்ணிடம் பேசுவதென்றால் உளறிக்கொட்டுவது அல்லது பேசத்தயங்குவதுமாக இருக்கிறார்கள். ஆணுக்கு பெண் ஒரு புதிர். தன் இரகசியங்களை வெளிக்காட்டவேண்டிய இடம். இப்படி நேரடியாக அணுகுவதில் உள்ள தயக்கத்தால், அதேநேரம் பெண்ணுடன் நெருங்கவேண்டும் என்ற…