Category: சிறுகதை

பிரதி

காசி

அக்கா, ரமேஷ் அண்ணனோடு ஓடிப்போய் விட்டாள். நிரந்தரமான காலை ஷிப்ட் முடிந்து மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருப்பவள், ஆறரை மணிக்கு எஸ்டேட் ஜெனரேட்டர் ஸ்டார்ட் செய்யப்பட்டு கரண்டு வரும்வரை வீட்டுக்கு வராததை தம்பிதான் முதலில் கவனித்தான் போலிருக்கிறது . தீபாவளிக்கு அப்பாவுக்குக்கூட தெரியாமல் டவுன் முழுவதும் அலைந்து திரிந்து இறுதியாய் R. அப்பாராவ் சில்க் ஸ்டோரில்…

நுரை

நுரை3

சூரிய ஒளியிலிருந்து கருப்புநிற கண்ணாடிகளைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது அந்த இடம். பின்னணியில் காதுகளை எரிச்சல் செய்யும் டும் டும் ஓசை. சுற்றியும் மிதப்பில் இருக்கும் ஆட்கள். எல்லாமே அவளை என்னமோ பண்ணியது. நாளைவரை வீட்டுக்கு யாரும் வரப்போவதில்லை. அப்பாவின் கூட்டாளி செத்துப்போனதும் அவர் இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பதும் நல்ல சகுனமாக நினைத்துக்கொண்டாள். மேசைக்கு…

மன்னிப்பு

மன்னிப்பு2

“இந்த மூணு பிள்ளைங்களுக்கும் கொஞ்சம் விபரம்  தெரிஞ்சதும், கண்காணாம தொலைச்சிட்டு போயிருனும். அப்பத்தான் நிம்மதி. நமக்குன்னு ஒரு வாழ்க்கை, நம்ம வழியில்…” அடுப்பறையில் பாலோடு சேர்ந்து பொங்கிக் கொண்டிருந்தாள் பாக்கியம். கடைக்குட்டி இந்திராணி மூன்றாவது முறையாக ஓடிவந்தாள். “அப்பா எப்ப வருவாரு?”  என்ற அதே கேள்வியுடன். “வருவாரு. போய் அக்காகூட   விளையாடு” எனச் சொல்லி, நேற்று…

அற்புதம்

maha 4

அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக…

நல்லிணக்கம்

mkk 1

இன நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் விதமாய் சிங்கப்பூரின் அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு, அன்று காலை பத்து மணியளவில் செம்பவாங்க் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. குங் சங் கூவாங் அவர்கள் வருவதாயிருந்தது. வரலாற்றுச்சிறப்பு மிக்கதாய் டேவிட் கருதியதால் அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து குளித்து முடித்து பட்டுவேட்டி சட்டையோடு…

வீடு

veedu 4

செல்வசேகர். அவர் தந்த முகவரி அட்டையில் இந்தப் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. பெயரின் மேல் கருப்பு கோட் அணிந்தபடி புன்னகைக்கும் முகம், வெள்ளை அட்டையில் மேலும் கருப்பாக தெரிந்தது. முதுகுக்குப் பின்னால் பளபளக்கும் கட்டிடங்கள், அவர் செய்யும் தொழிலைத் தெளிவாக காட்ட. செல்வசேகர் முகவரி அட்டை ஏன் தந்தார் என பாலாவிற்கு புரியவில்லை. அவரின் கைபேசி எண்…

மசாஜ்

chavutti_movie-1

மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக…

கயிறு

kayiru-1

பிரான்சிஸ் வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாம். போனாலும் பார்த்தோமா, வந்தோமா என்றிருந்திருக்க வேண்டும். செய்யாதது பெரும் பிழை. நினைக்க நினைக்க அவமானம் ஒரு துர்நாற்றம் போல எரிச்சல் படுத்திக் கொண்டிருக்க, வண்டியை வேகமாய் உறும விட்டேன். கோயிலுக்கு நேரமாகிவிட்டது. இன்னேரம் பூசை தொடங்கியிருக்கும் என்பது இன்னும் பதட்டத்தை அதிகரித்தது. இவ்வளவு தாமதமாக ஒரு நாளும் போனதில்லை. கோயில்…

இரட்சிப்பு

mahathman-1

ஏழாவது முறையாக சிறையிலிருந்து விடுதலையாகிறேன். கடந்த ஆறுமுறையிலும் எங்கு போவது என்ற போக்கிடம் தெரியாமலிருந்தேன். இந்தமுறை கொஞ்சம் ஞானம் வந்ததுபோல அடங்கியிருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நானாகத் தேடிக்கொண்டதும் சிக்கிக்கொண்டதும் மூன்றுமுறை. அதிரடிச்சோதனைக்கு ஏதாவதொரு பெயரிட்டு கிடப்பில் கிடந்த ஏதாவதொதொரு கோப்புக்குப் பலியானது மீதி. தைப்பிங் சிறை, தாப்பா சிறை, புடு சிறை, சுங்கை பூலோ…

பொட்டலம்

mahatman

உள் நுழைந்ததும் வலது பக்கமாக பார்த்துப் போவீர்களேயென்றால் படிகள் தென்படும். முதல் மாடிக்குச் செல்லுங்கள். இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என்று ஏதுமில்லை. முதல் மாடி மட்டும்தான். வலதுபக்கமாகத் திரும்புங்கள். நேராகச்சென்று மறுபடியும் திரும்புவீர்களென்றால் நான்கைந்து விதமான உணவருந்தும் இருக்கைகள் இருக்கும். இரு மருங்கிலும் காணலாம். வலது பக்கத் தொடக்கத்திலேயே வெண்ணிறப் பிரம்பு நாற்காலிகள் உண்டா,…

வலி அறிதல் (முதல் பரிசு)

செல்வன் காசிலிங்கம்

அப்பாவுக்கு எம்ஜியாரை அவ்வளவாக பிடிக்காது. “நல்லா கவனி, அப்படியே தூணு பின்னால ஒளிஞ்சிகிட்டே கண்ணக் கசக்குவான் பாரு..”, என்று எள்ளல் தொனிக்க சிரித்தபடியே அவர் அடிக்கடி சொல்லும் ஒற்றை வரியே எம்ஜியாரைப் பற்றிய அப்பாவின் பரிகாசம் கலந்த விமரிசனமாக பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவரின் வயதேயொத்த ராஜூ அங்கிள், பலராமன் மாமா போன்ற பலராலும்  “என்னாமா…

உப்பு (இரண்டாவது பரிசு)

ஐஸ்வரியாகணபதி

நெற்றியின் வியர்வை  உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஏங்கி இருந்த கண்கள் கண்ணாடிப்பேழையை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தன. மரியாதை தெரியாத வெள்ளைத்தோல் ஆடவன் ஒருவன், அவன் காரசாரமான…

குளத்தில் முதலைகள் (மூன்றாவது பரிசு)

alagan-1

நடு இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது காலம். சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. அந்த மோட்டார் சைக்கிளில் 30 வயது எட்டி இருக்கும் இரு முரட்டு ஆசாமிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது பேச்சின் எந்த வார்த்தையும் ஒழுக்கம் நிறைந்த மனிதர்களாகக் காட்டவில்லை. அந்த இரண்டு பேரில், ஒருவனின் போன்…

இருப்பது

sridhar-1

காலையிலிருந்தே மோடம் போட்டுக்கொண்டிருந்தது. மழை வரப்போகிறது. வரலாம் என்று இரண்டு மூன்று நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தார். வெயில் அதிகமாகி உயிர்கள் வாடும்போது தானாக மழைபொழிந்துவிடும் இயற்கையின் சமநிலையை எண்ணி வியப்பாக இருந்தது. தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு குறைவாகத் தண்ணீர் ஊற்றினார். எப்படியும் மழை பெய்யப்போகிறது. ஊற்றுகிற தண்ணீரைவிட மழைதானே அவற்றுக்கும் பிரியமானது என்று நினைத்துக்கொண்டார். வாசலில்…

கரகம்

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8b-1

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில்…