Category: சிறுகதை

இறுதி யாத்திரை

ஒன்றாக செத்துப்போக முடிவு செய்ததும் அந்த புளோக்கின் பன்னிரண்டாம் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து விடும் யோசனை தான் முதலில் வந்தது. இன்றைய சூழலில் ஆகச் சுலபமானது, ஆனால் சிறந்த முறையல்ல.  அந்த வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையின் மீது தீராத வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். ஒருகணம் உச்சமேறிய அச்சமோ, கோபமோ, விரக்தியோ ஏதோவொன்று அந்தப்…

த்வந்தம்

நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன்.

நீராலானது

“அம்மா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா அப்பா செத்திருக்க மாட்டாரு!” என்றான் அரசு.  அப்பாவின் படையலுக்கு வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு சென்றபின்னர் வீடு மீண்டும் வெறுமையைப் போர்த்தத் தொடங்கியிருந்தபோது எழுந்த அவன் குரல் மாலதியைத் திடுக்கிட வைத்தது. அண்ணன் என்ன சொல்லவருகிறான் என்பதையும் தன் காதில் விழுந்த சொற்களை நம்பலாமா என்றும் யோசித்து குழம்பிவிட்டாள்.

மோட்சம்

“என்ன டே, புது கெராமவாசி பொறச்சேரி பக்கமா வந்து நிக்க,” என்றார் மருத்துவரான முதுக்கடசர். அவர் பேச்சில் சிறிது ஏளனமும், காட்டமும் தெரிந்தது. அதையும் மீறி அவர் உடைந்து அழுது விடுவார் என்பதை அவர் உடல் மொழி உணர்த்தியது. மாரனின் கழு உறுதியானதால், புதுக்கிராம தெருவினுள் நுழைய எத்தனித்தபோது மருத்துவருக்கு நூறு சவுக்கடிகளே பரிசாகக் கிடைத்தது.…

எலி

வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட பேசாமல் என்னையும் எதிரிலிருந்த மணி அண்ணனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெலிசியா. அவள் கண்களின் கீழே விழுந்திருந்த அழுத்தமான கரிய ரேகைகள் கணினித் திரையில் விழுந்த கோடுகளாகத் தெரிந்தன. அறையில் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் இரண்டு மூன்று சாமிபடங்கள் எண்ணெய் படிந்ததைப்போல இருந்தன. சாம்பிராணி புகையின் நெடி காட்டமாக இருந்தது. காவி…

பிளாச்சான்

நேற்று மாலை லீ சாய் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து என் முன்னால் நின்றான். சில வாரங்களுக்குப் பின் இன்றுதான் அவனைப் பார்க்கிறேன். வழக்கமாக பெரிய கேரியர் சைக்கிளில் வருபவன் நேற்று தலைதெறிக்க ஓடி வந்திருந்தான். அந்தப் பெரிய உடம்பு மழையில் நனைந்த  பூனைக்குட்டி போல உதறிக் கொண்டிருந்தது. உயிர் பயம் அவன் உடலெங்கும் படர்ந்திருக்க வேண்டும். …

அருவாச்சாமி

ஆங்கில ‘U’ எழுத்தை தலைகீழாக நிறுத்திவைத்தது போலிருந்தது அந்தக் கோவில். சிறு மாடம் போன்ற அமைப்பு. மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அதன் நடுமையத்தில் அருவாச்சாமி பளபளப்போடு குத்தி நின்றிருந்தது. மூக்கில் எலுமிச்சம் பழம் அழுத்தி செருகப்பட்டிருந்தது. நடுமையத்தில் விபூதிப்பட்டை, அதன் நடுவில் குங்கும தீற்றல். வளைவான தலைப்பகுதியில் ஒருமுழ கதம்ப மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கீழே ஒரு…

இந்திர தேசம்

இரவு பத்து மணிக்கு நட்சத்திர விடுதியை விட்டு வெளியே வருபவனின் தனிமையை, பாங்காக்கின் டாக்ஸி ஓட்டுனர்கள் சரியாக இனம் கண்டுக்கொள்கிறார்கள். காரில் ஏறியவுடன் செல்லுமிடம் பற்றி எந்த வினாவுமின்றி வண்டியை சுக்கும்வித் சாலையில் இறக்கினார் அந்த ஓட்டுனர். சிறிது தூரம் சென்றவுடன், சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினார். பிறகு, பின்பக்கம் திரும்பி என்னை பார்த்து சிரித்தார்.…

கறுப்பு ரத்தம்

நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது.  மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார்.  அப்படிச் செய்யமுடியாது…

இளவெய்யில்

வெய்யில் படியத் தொடங்கியதும் கடையின் கண்ணாடிச் சுவரில் படிந்திருந்த பனித்துளிகள்  மெல்லக் கரையத்தொடங்கின. எதையோ மறந்துவிட்டோமா என நீலமலர் மங்கியிருந்த வெளிச்சூழலைக் கூர்ந்து பார்த்தாள். ஒரே ஒரு துளி மேலிருந்து கீழ் இறங்கி பனிப் போர்வையின் மேல் கோடிழுத்துச் சென்றது. நீலமலர் வெளிப்புறத்தில் இருந்திருந்தால் அதில் ஏதாவது வரைந்திருப்பாள். அவளுக்குப் பூக்களை வரைவது பிடிக்கும். சுலபமானதும்கூட.…

எச்சம்

சன்னதி தெருவின் நான்காவது வீட்டை நெருங்கிய போது, “ஏட்டி, நாளான்னைக்கு பத்திர பதிவாக்கும். கேட்டிச்சா” என்ற சிவராமன் குரல் உள்ளிருந்து எழுந்தது. வேண்டுமென்றே உரத்து சொல்வது போல் செயற்கையாக இருந்தது அவன் குரல். அந்நேரத்தில் அவன் வீட்டிலிருப்பானென நான் ஊகித்திருக்கவில்லை. உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்ற இரட்டை மனதோடு வாசல் நடையை தாண்டினேன். உள்ளறையிலிருந்து வெளிபட்டவன்…

அடிமை

மீண்டும் ஒருமுறை எண்ணிப்பார்த்தேன். ஐம்பது டாலர் சரியாக இருந்தது.நான் மூங்கில் கேட் வழியாக நுழைந்து ஆர்கிட் தோட்டத்துக்குச் சென்றேன். செதுக்கிய கல் தட்டைகளை புதைத்து பாதை அமைக்கப்பட்டிருந்தது. நான் நடந்து நடந்து சலித்த பாதைதான்.  கடந்த இரண்டு மாதங்களிலேயே மூன்று முறை மேடத்தை சந்தித்து பேச வந்துவிட்டேன். ஆனால் எதுவும் நான் நினைத்தது போல அமையவில்லை.…

முலைகள்

சிவப்பு நிற பிளவுசும் அதே நிறத்தில் ஸ்கார்ட்டும் அணிந்திருந்த அந்தச் சீனப்பெண்ணைச் சற்று முன்புதான் காண்டினில் பார்த்தேன். அந்த மருத்துவமனையில் அவளது உடையின் வண்ணம் பொருந்தாமல் துருத்தி நின்றது. புத்தகம் ஒன்றைப் படித்தபடி பசியாறிக்கொண்டிருந்தாள். இறுக்கமான பிளவுசில் அவள் முலைகள் பருத்து, மதர்த்து நிற்கும் தோற்றத்தை தந்தன. பிளவுசின் முதல் பொத்தான் திறந்துக் கிடந்தது. வேண்டுமென்றே…

சுடரேற்றம்

திருப்பட்டூருக்கான அரசுபேருந்து துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து விடியல் துடிகொள்ளத் தொடங்கிய நேரத்தில் கிளம்பியது. வழியெங்கும் கடைவாசல்களில் நீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள். “வயசுப்பிள்ளை வேகமா பஸ்ஸீல ஏறி எடம்பிடிக்குதான்னு பாரு,” “இதுக்குதான் வரலேன்னு சொன்னேன்…” என்ற சுஜி தன் பின்னால் நின்றவரின் கைகளில் மோதிய துப்பட்டாவை இழுத்துப்பிடித்தாள். “ஆமா…வரலேன்னா ஆச்சா. காரிய சாமார்த்தியமில்லாம,” “வியாழக்கிழமைன்னா இந்தபஸ்ஸீல கூட்டமாதான் இருக்கும்……

உதிர்ந்த இலை

தடக்…. தடக்… தடக்…  இரயில் வண்டியின் ஒட்டுமொத்த சப்தம் வேறொன்றாக இருப்பினும், மூன்றாம் வகுப்புக்கென்று சில பிரத்யேக சப்தங்கள் உண்டு. அதன் நெரிசலும் பிதுங்கலும் கொதிக்கும் மரப்பலகை இருக்கைகளும் ரயிலின் போக்கோடு இணைந்துக் கொண்டாலும் சில சமயம் ரயிலின் சத்தமும் சில நேரம் ஆட்களின் சத்தமும் ஒன்றையொன்று விஞ்ச முனைந்தன. நானும் அம்மாதிரியான முயற்சியில்தான் ஈடுப்பட்டுருக்கிறேன்…