
மதுரையிலிருந்து தென்கிழக்கில் 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வூரானது வைகையாற்றின் தென்கரையிலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. கீழடியில் உள்ள ‘பள்ளிச்சந்தை திடல்’ என்னும் பகுதியில் இந்தியத்தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவின் ஆறாவது கிளை 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வானது வரலாற்று முக்கியத்துவம்…