Category: கட்டுரை

நீயின்றி அமையாது உலகு

அந்தப் பெண்ணை நினைவில் வைத்துக்கொள்ள அவளின் முகமோ அவளின் பெயரோ என்னிடம் இல்லை. காலியாய் கிடக்கும் வீடொன்றே போதுமானதாக இருந்தது. உண்மையில் எனக்கும் பெண்களுக்குமான மனத்தொடர்பும் அவர்கள் மீதான ஈர்ப்பும் ஏற்பட அந்த பெண் காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் அவள் குறித்து நான் அறிந்தது உண்மைதானா என்கிற சந்தேகம் கொள்ளக்கூடிய வயதெல்லாம் அப்போது இல்லை. இன்றும்…

கலை இலக்கிய விழா 7 : ஒரு பார்வை

வல்லினம் கலை இலக்கிய விழா 7, இம்முறை மலாயா பல்கலைக்கழகத்தில் நவம்பர் முதல் நாள் நடைபெற்றது.  இவ்வாண்டு கலை இலக்கிய விழாவில் நான்கு இளம் படைப்பாளர்களின் நூல்கள் வெளியீடு கண்டன. அவை முறையே ம.நவீனின் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’, அ.பாண்டியன் எழுதிய ‘அவர்கள் பேனாவின் இருந்து கொஞ்சம் மை’ எனும் மலாய் இலக்கியம் குறித்த கட்டுரைத்தொகுப்பு,…

அஞ்சலி : தந்தையைப் போன்ற வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு

ஆயுதபூஜை என்று கூறப்படும் சரஸ்வதி பூஜை அன்று திறனாய்வின் பிதாமகர் என்று பலரால் போற்றப்படும் திரு வெங்கட் சாமிநாதன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பத்திரண்டு. தம் வாழ்வின் இறுதி மூச்சு வரை கலை, இலக்கிய விமர்சகராக அற்புதமான பணி ஆற்றினார். தமிழகத்தில் பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பல இணையப்பக்கங்களில் எழுதிவருகின்றனர். சிங்கப்பூர்த்…

இலக்கியத்தின் வழி தேசிய அடையாளம்

இந்த மாதம் எதிர்ப்பாராவிதமாக ‘இலக்கிய மாதமாக’ அமைந்து விட்டது.  நவம்பர் 1, வல்லினம் கலை இலக்கிய விழாவும் அதைத் தொடர்ந்து 6,7-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்பும் சிறப்பாக அமைந்தன. அனைத்துலக தரம் வாய்ந்த சிங்கப்பூர் இலக்கிய விழாவில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் மிக அறிதாகவே கிடைப்பதாக அறிகிறேன். ஆக கடைசியாக இருபத்து நான்கு…

ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள்

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நண்பர் நவீன் அவர்களின் ஆசிரியப் பணி அநுபவப் பதிவுகளை வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள, கீழ்க்காணும் குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்தப் பதிவுகள் பல அடிப்படையான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதனைச் சுருக்கமாக தொகுத்துச் கொள்ள முயல்கிறேன். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்நிலையும்…

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை

இன்றைய அறிவியல் காலத்தில், உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீனத் தொழில்நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவிப் புகழ்பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலகநாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அதே தொழில்நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மைப்படுத்தவும் முனைகின்றன. அதோடு, மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.…

யார் அந்தப் பண்டிதன்?

அங்கியை அணிந்துகொண்டு மாபெரும் மாணவர்கள் கூட்டத்திற்கும் அவர்களை உள்ளே வரவேற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்கும் இடையில் விரிவுரையாளர்களின் அணிவகுப்பில் நின்றுக்கொண்டிருந்தேன். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் பகுதி. புலங்களின் தலைவர்கள் பிரத்யேக அங்கிகளை அணிந்துகொண்டு விரிவுரையாளர்களுக்கு நேரெதிரில் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தனர். விழாவின் தொடக்கத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பின்னணி இசை முழங்கியது. மாணவர்களும் பெற்றோர்களும் எழுந்து…

கவிதையும் பொருளும்

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர்…

பாவனைச் சமுதாயம்

கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு 10 மணி அளவில் எனது புலனத்தில் தொடர்ந்து வரத்துவங்கிய தகவல்கள் என் கவனத்தைக் கோரின. இந்திய முன்னால் அதிபரும் உலக தமிழர்கள் பலவகையிலும் நன்கு அறிந்த பெரியவர் எ.பி.ஜே அப்துல் கலாம் மரணம் பற்றிய தகவல்கள் அவை என்பதால் அத்தகவல்களின் நம்பகத்தன்மையை முதலில் அறியவேண்டியிருந்தது. அது உண்மை தகவல்…

கே. எஸ். மணியம்: அடையாளம் காணப்படாத ஆளுமை

“நான் யார்?”, “எங்கிருந்து வந்தேன்?”, “இனி நான் செல்லபோகும் இடம் எது?” போன்ற அடிப்படையான ஆனால் அர்த்தம் பொதிந்த இக்கேள்விகளே மனிதன் தன்னைக் குறித்த அடையாளத்தை நிர்மாணித்துக்கொள்ளவும் தான் யாரெனத் தெளிவாக மீட்டுணரவும் செய்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் சுய அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் ஒருவர் இனம், மதம், தனது சமூக-பொருளாதார நிலை, அரசியல், குறைந்தபட்சம்…

வாட்டர்: கனவுகளை மூழ்கடிக்கும் புண்ணிய நதி

இந்திய சமூகத்தில் விதவைகள் எந்த நிலைமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும், அந்த அவலம்  வேத சாஸ்திரத்தைக் கொண்டு சமூகத்தின் மத்தியில் எவ்வாறு ஆழமான  நம்பிக்கையாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது ‘வாட்டர்’ திரைப்படம். சர்ச்சைக்குரிய படைப்பாளி என்று கூறப்படும் இந்தோ-கன்னடியரான இயக்குனர் தீபா மேத்தாவின் இயற்கை கூறுகள் வரிசை கொண்ட (element trilogy) மூன்றாவது படமாக ‘வாட்டர்’…

வரலாற்றிலிருந்து வாக்கு மூலங்கள்

நினைவுகளைப் பதிவு செய்வது ஒரு கலை. இக்கலை வடிவத்தை ‘நினைவுக்குறிப்பு’ (memoir) என்கிறோம். இது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இலக்கியத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புனைவு இலக்கியம். மற்றொன்று புனைவில்லா (அல்புனைவு) இலக்கியம். சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என கற்பனை கலந்த அனைத்தும் புனைவுகள் வகையைச் சார்ந்தது. சுயசரிதை, நாள்குறிப்பு, நினைவுக்குறிப்பு…

‘கலைக்கு வயதாவதில்லை’ – ஆர்தர் பொர்மன்

சுற்றிலும் செடி கொடிகள், வானுயர வளர்ந்த மரங்கள், சலசலத்து ஓடும் தெளிந்த நீரோடை. வீடோ முற்றிலும் மூங்கில்களால் ஆனது. இயற்கைதான் இங்கே ஜீவ நாதம். கூச்சிங் நகரத்திலிருந்து ஒரு மணி நேர காரில் பயணம். சரவாக் என்றாலே நீண்ட வீடுகளின் கலாச்சாரம், இசை, நடனம், உணவு, வாழ்க்கை முறை என முற்றிலும் மாறுபட்ட சூழல். அது…

காலம் தந்த கருப்பினக் கவிதைகள்

“மனித இனம் தோன்றிப் பெருக ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை அடிமைப்படுத்த விழையும் போராட்டமும், அடிமைப்படுவதிலிருந்து விடுபட விழையும் போராட்டமும் ஒரு சேர நடந்துகொண்டுதான் இருக்கிறது. மனித இனம் இருக்கும்வரை இப்போராட்டமும் இருக்கும்” – எழுத்தாளர் இமையம் ஆப்பிரிக்கக் கவிதைகள் லூசி தெர்ரி (1730-1821)–இல் இருந்து தொடங்குகிறது. ஆனாலும் பிலிஸ் வீட்லீ (1753-1784) என்பவர் எழுதிய “Poems on…

அபத்தங்களைப் பேசுதல் கூடாதா..?

பத்திரிகைகளில் எனது படைப்புகள் வரத்தொடங்கிய காலம். பெரும்பாலும் நகைச்சுவை துணுக்குகள்தான் எனக்கு சுலபமாகக்  கை கொடுத்தன. நண்பர்களுடனான உரையாடலில் இருந்தும் வீட்டிலும் உறவினரிடத்திலும் கிடைத்த நகைச்சுவை உரையாடல்களையும் கொஞ்சம் மாற்றி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளியில் பிரசுரமான படைப்புகளை காட்டி, பள்ளிக்கு வெளியிலாவது நான் கெட்டிக்காரனாக இருக்க வேண்டியிருந்தது. இப்படி வளர்ந்த என் எழுத்து…