
செந்நிறமாக எங்களைச்சுற்றி ஒளி விழுந்துக்கொண்டிருந்தது. செந்நிறமான மண். வானெங்கும் கோடுகோடாக செந்தீற்றல்கள். கடல் தீயாக அலைகொண்டிருந்தது. ஆலிஸின் கண்ணை என் மீது உணர்ந்தேன். அவள் முகமும் தீக்கொண்டதுபோல் சிவந்திருந்தது. கன்னங்கள் பழுத்திருந்தன. தோளில் பருக்கள் நட்சத்திரக்கோவையாக நடனமிட்டன. அவள் என் பக்கமாக திரும்பிப் புன்னகைத்தாள். “மின், இந்த ஒளியில் ஒரு நொடிக்கு, நீ உன் அப்பாவைப்போலவே…