
“கட்டத்தாத்தா எங்க போய்த்தொலைஞ்சாரு? தண்ணியமத்தலுக்கு நேரங்காணாதா?” அடர்நீலநிறக் கட்டங்கள் கொண்ட லுங்கியை ஏத்திக் கட்டியவாறு தன்ராஜ் கேட்டான். சட்டையணியாத அகல உடம்பின் ஓரத்தில் துண்டு தொங்கிக்கொண்டிருந்தது. அருகிலிருந்த பெஞ்சில் எதுவும் பேசாமல் பாஸ்கரண்ணாச்சி அமர்ந்திருந்தார். கருத்த எருமைத்தோல் போன்ற கைகள் இரண்டும் மரவிளிம்பைப் பிடித்திருந்தன. இடது கையில் வழக்கமாக அணியும் தங்கப்பூச்சு கொண்ட கடிகாரமும் விரல்களில்…