
“வீட்டுக்கு வந்து ரெண்டு மணிக்கூட ஆகல, அதுக்குள்ள எங்கல போற? ஒனக்கு பிடிக்குமேன்னு ரசவட செஞ்சு வச்சா, ஒரு வாயி திங்கல. போக்கு சரியில்ல கேட்டியாடே…” நான் சட்டையை மாற்றும் போது, கூடவே அம்மையின் அர்ச்சனையும் ஆரம்பித்தது. “வெளிய போறதுலாம் சரி, வேற ஏதாவது பண்ணிட்டு வந்த, வீட்டு நடைல ஏறக் கூடாது. அப்பனுக்க எல்லா…














