
“சரி…. இறங்கு” என்றான் சேகர். நான் அவசரமாக இறங்கி நின்றேன். தலைக்கவசத்தைக் கலற்றியபோது ‘டும் டும்டும் டும் டும்டும்’ என கதி மாறாமல் முரசு அதிரும் சத்தம் கேட்டது. ஒலிபெருக்கியில் சீனத்தில் ஆண் குரல் எதிரொலிகளோடு கேட்டது. அவன் மோட்டர் சைக்கிளை பர்கர் வண்டிக்குப் பின்னால் சாய்வாக நிறுத்தி விட்டு சாவியை உருவிக் கொண்டு வந்தான்.…