யுவன் சந்திரசேகர் படைப்புலகம் நிகழ்ச்சி பதிவு (காணொளி)

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தலைமை உரை அரவின் குமார் உரை – குள்ளச்சித்திரன் அ, பாண்டியன் உரை – மணற்கேணி ம.நவீன் உரை – யுவன் சிறுகதைகளில் மூன்று கூறுகள் யுவன் சந்திரசேகர் உரை

“படைப்பாற்றலின் முதிர்ச்சி ஒரே நாளில் வந்துவிடாது”

‘S.E.A Write Award’ எனும் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருது 1979-ஆம் ஆண்டுத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இது தென்கிழக்காசிய நாடுகளின் ஆசியான் (ASEAN) கூட்டமைப்பை உள்ளடக்கிய எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் இலக்கிய விருதாகும். தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இவ்விருது தென்கிழக்காசிய எழுத்தாளர்களின் படைப்பாற்றலை அங்கீகரிப்பதோடு, சமகால இலக்கியம் குறித்த பரந்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதையும், பல்வேறு…

சு. கமலா சிறுகதைகள்: விதைகளை மட்டுமே உற்பத்திச் செய்யும் பூ மரங்கள்

மலேசியச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து விமர்சனக் கட்டுரைகள் எழுதும் முன், அக்கதைகள் குறித்த அபிப்பிராயங்கள் எதன் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன என்பதை விளக்க வேண்டியுள்ளது. இங்கு ரசனை விமர்சனத்திற்கான மரபு என ஒன்று வலுவாக உருவாகாத சூழலில் இவ்வகை விளக்கங்கள் அவசியமாகின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை கல்வியாளர்களின் விமர்சனங்கள் வழியாகவே இலக்கியத்தின் தரம் நெடுங்காலமாக அளவிடப்படுகிறது. நவீன இலக்கிய…

மேலங்கி

மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து…

தைலம்

ஹசான் வந்த சில வாரத்தில் “அடுத்த ஆளுக்குத் தயாராயிட்டா போலிருக்கு… இவன வச்சு இங்கயே ஐ.சி எடுக்கலாம்னு நெனக்குறா… இவுங்களுக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டோம்…’’ என ஜேக் இரண்டு மூன்று கடைக்காரப் பையன்களிடம் பேசத் தொடங்கியிருந்தார். “அது அவளோட ரெசெக்கி பாக்சிக்… அவளுக்குன்னு இருந்தா நிச்சயம் கெடக்கும். நமக்கு நம்மோட” என ஜேக்கின் அருகில் வியாபாரம்…

இசக்கி

1 “சார் உங்களுக்காச்சும் காசு வெட்டி போடுறதுல எல்லாம் நம்பிக்க இருக்கா?” என்று என் எதிரில் விசாரணைக் கைதியாக அமர்ந்திருந்த மெல்லிய உடல் இளைஞன் கேட்டான். அவன் பேசும் போதே குரலில் பரிதவிப்பு தென்பட்டது. நான் ”உண்டு” எனச் சொல்ல வேண்டும் என்பது போல் அவன் கண்கள் காத்திருந்தன. நான் எஸ்.ஐ. ராஜரத்தினத்தை திரும்பிப் பார்த்தேன்.…

மெக்தலீன்

மெக்தலீன் சீடராகச் சேர்ந்த அன்றிலிருந்தே ஜானுக்கு அசூயையாக இருந்தது. நேரடியாகத் தன் குருவிடம் சொல்லவும் தயக்கம்தான். முன்பனிக்காலத்தின் ஓரு மாலை வேளையில் குளிர் கூடத் தொடங்கியிருந்தது. பருத்தியாலான வெள்ளை அங்கியின் மேல் இளநீல சால்வையைப் போர்த்தியவாறு தன் நீண்ட கூந்தல் முன் தரையில் படிந்திருக்க மெக்தலீன் யாழ் வாசித்துக் கொண்டிருந்தாள். அவளின் அந்த அடர் பச்சை…

சிகண்டி: கலை உருவாக்கும் வாழ்வின் புதிய மதிப்பீடுகள்

‘பேய்ச்சி’க்குப்பின் நவீனின் இரண்டாவது நாவல் ‘சிகண்டி’. ‘பேய்ச்சி’ நாவல் தடை ஏற்படுத்திய இலக்கிய அதிர்வே ஓயாத நிலையில் நவீனின் இந்நாவல் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைச் சுமந்து வெளிவந்துள்ளது. ம. நவீனின் படைப்புகளைச் சார்ந்து எதிரும் புதிருமாக ஓர் இலக்கிய வட்டம் காத்திருக்கிறது என்றாலும் அப்புனைவை ஒட்டிய ஆக்ககரமான கட்டுரைகள், விமர்சனங்கள் தொடர்ந்து பிரசுரமாவது ஆரோக்கியமான இலக்கியச்…

மண்டலா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுபாவிடமிருந்து ஒரு முகநூல் பதிவு. அவள் பதிவிட்டிருந்த படத்தைப் பார்த்ததும், பணிச்சுமையினால் ஏற்பட்ட களைப்பு எல்லாம் பறந்தோடியது. கண்கள் அகலமாக விரிந்தன. முகம் புன்னகையை ஏந்திக்கொண்டது. ஒரு குளத்தில் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் மிதக்கும் நீர் மலர்கள் போல மனம் அவ்வளவு அமைதியானது. அவள் அனுப்பிய படத்தை மிக உன்னிப்பாகப்…

தொடர்பவைகளின் கூற்று

குழுவாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர் மனநல மருத்துவரான சுனில் தான். இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அவரிடம் மருத்துவம் பார்ப்பவர்களே என்கிற தகவல் பயணத்திற்காகக் காத்திருந்த பேருந்தில் ஏறும்போது தான்  தெரிந்தது . யாருக்கும் யாரும் இதற்கு முன் அறிமுகம் இல்லாதவர்களே. சுனில் இது மாதிரியான பயணத்தை எப்போதும் மேற்கொள்வதாக…

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

·  அறிவியல் சிறுகதை போட்டி ஏற்பாட்டு குழுவினரும் அவர்தம் குடும்பத்தாரும்  இந்தப் போட்டியில் பங்கெடுக்க முடியாது.   ·  மற்றபடி போட்டியில் மலேசியப் பிரஜைகள், வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம். ·  போட்டியில் பங்கு பெறும் கதைகள் பக்க வரையறைக்கோ சொற்களுக்கோ கட்டுப்பட்டதல்ல. ·    ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பலாம். ·  அறிவியல் கூறுகள் இருந்தால்…

யாழ் சிறுகதை போட்டி

அ. யாழ் நிறுவனத்தின்  இச்சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் உள்ள அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் அல்லது உயர்நிலைப் பள்ளிகளில்  இவ்வாண்டு படிவம் 4,5,6 -ல் (17 வயது முதல் 20 வயது வரை)  பயிலும் மாணவர்கள் பங்கெடுக்கலாம். ஆ. யாழ் நிறுவனம் வழிநடத்திய பட்டறையில் பங்கெடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தப் போட்டில் பங்குபெற முடியும்.  இ. இந்தப்போட்டி…

“நான் ஒரு திரிபுவாதி” – அக்கினி சுகுமார்

மலேசிய இலக்கியச் சூழலில் அக்கினியின் எழுத்துகள் தனித்துவமானவை. மலேசியப் புதுக்கவிதை வரலாற்றின் தொடக்கக் காலத்தில் அதன் போக்கை தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக இயங்கியவர் பின்னாட்களில் அறிவியல் கட்டுரையாளராக வெகுமக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டார். நகைச்சுவையான பாணியில் சிக்கலான தகவல்களையும் எளிய மக்களிடம் சேர்க்கும் வல்லமை உள்ள எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இவர். கவிதை, நாவல் என இவர்…

நாவல் முகாம்: ஒரு பதிவு

செப்டம்பர் 2020இல் நாவல் முகாமுடன் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ரஷ்ய இலக்கியங்கள் குறித்து உரையாடலாம் என்ற எண்ணம் இருந்ததால் நகர சூழலை விட்டு ஒதுங்கிய இடமாகத் தேடினோம். அது கனமான தலைப்பாக இருக்கும் என்பதால் நகர இரைச்சல் ஏற்றதல்ல என்பது அனுமானம். முகாமுக்காக நண்பர் கங்காதுரை கண்டடைந்த இடம்தான் தைப்பிங்…

வல்லினம் விருது விழா 2022: சில நினைவுகள்

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. அ. ரெங்கசாமிக்கு முதல் வல்லினம் விருது வழங்கப்பட்டதோடு வல்லினத்தின் முதல் ஆவணப்பட முயற்சியும் அவரது வாழ்வைப் பதிவு செய்யும் திட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. அவ்விருது விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகக் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை கலந்து கொண்டார். பின்னர், 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதின் வழி ‘வல்லினம் விருது’ தனக்கான…

சிகண்டி : திட்டமிடப்பட்ட விதியின் கதை

இலக்கியத்திலும் திரைப்படத்திலும் பால் புதுமையினர், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடிகள் என மையச் சமூகத்துக்கு வெளியே அதிகமும் அறியப்படாமல் இருக்கும் விளிம்பு நிலையினரை முன்வைத்துப் புனையப்படும் படைப்புகள், தாம் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்காகவே சிறந்த படைப்பு எனும் தகுதியைப் பெறுவதைக் காண முடிகிறது. ஆனால், படைப்பின் கலை ரீதியிலான வெற்றி என்பது அந்தப் பிரதி முன்வைக்கும் களத்தையும்…

யோக முத்ரா

காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி யோகா மெத்தையை (Yoga Mat) எடுத்துக் கொண்டு வீட்டின் பால்கனியைத் திறந்தேன். காலை பனியைப் பார்த்து அதிக நாளாகிவிட்டது. பனி எங்கும் படர்ந்திருந்தது. பனியைப் பார்த்ததும் மனதில் ஓர் அமைதி பிறந்தது. அது யோகா செய்வதற்கான மனநிலை. உடனே வாகனத்தை நோக்கி நடந்தேன். என் வாகனம் முழுக்க பனித்துளிகளால் ஈரமாக…