வல்லினம் & GTLF இணைவில் மாபெரும் இலக்கிய விழா

இம்மாத இதழ், வல்லினம் மற்றும் ஜார்ச் டவுன் இலக்கிய விழா குழுமத்தின் இணைவில் நடைபெற உள்ள மாபெரும் இலக்கிய விழாவின் சிறப்பிதழாக மலர்கிறது. இலக்கிய விழா தகவல்களோடு அதில் பங்கெடுக்கும் இலக்கிய ஆளுமைகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. உலகில் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றான ஜார்ச் டவுன் இலக்கிய விழாவில் வல்லினமும் ஒரு…

கனவுகள் குவியும் களம்

கடந்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் அனைத்துலக இலக்கிய சங்கமமான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் (George Town Literary Festival) கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படும் இவ்விழா குறித்துத் தமிழ்ச் சூழலில் அறிமுகம் குறைவுதான். அதற்குத் தமிழ்ச்…

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம்

நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய,…

புதுமைதாசன்: சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…

தமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா

நடைமுறையில் இருக்கும் ஒன்றின் மீது பொதுவாகப் பலருக்கும் விமர்சனங்கள், குறைகள் மாற்று கருத்துகள் இருப்பது மிக இயல்பானது. அரசியல் முதல் சமூக அமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் மீதும் இதே நிலைதான் உள்ளது. ஆனால் பெருவாரியாகக் குறை காண்பவர் அல்லது விமர்சனம் வைப்பவர் அந்தச்  சூழலை மாற்றும் திட்டங்களில் இறங்குவதில்லை.  அப்படி இறங்கி போராடி மொத்த அமைப்பையும்…

விஸ்வநாதன்: கலைக்குள் உழலும் மண்புழு

விஸ்வநாதன் என்ற பெயர் கலையுலகில் அறியப்பட்டது மிகக்குறைவுதான். எழுத்துலகில் அதனிலும் அரிது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளவர். மேடை நாடகங்களில் இயக்குனராகவும் துணை இயக்குனராகவும் பங்காற்றியவர். ஆனால் எதிலும் எப்போதும் ஒதுங்கி நிற்பவர். தன்னை முனைப்புடன் முன்வைக்கத் தெரியாதவர். முன்வைப்பதை ஒட்டிய அரசியலையும் அறியாதவர் எனலாம். விஸ்வநாதனை முதலில் ஓர் ஆசிரியராகவே அறிவேன். இவருடன்…

ஓயாத பணிகளால் உருவாகும் பண்பாட்டு பாதை

சிங்கப்பூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, பெருங்காரியங்களைச் செய்துவருபவர் பேராசிரியர் அருண் மகிழ்நன். வளங்கள் எங்கும் இருக்கலாம். அதனை நிறைவாக ஒழுங்கமைக்க அறிவாற்றல் அவசியமாக உள்ளது. அவ்வகையில், தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளில் தனியாத ஆர்வம் கொண்ட இவரின் திட்டங்கள், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலில் நீண்ட காலம்…

தருக்கத்தால் நிலைக்கொள்ளும் படைப்புலகம்

அ. பாண்டியனின் இலக்கியப் பங்களிப்பைப் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என மூன்று முக்கியமான புலத்திலிருந்து அணுகலாம். அவரது புனைவுகள் வரலாற்றின் நுணுக்கமான இடைவெளிகளை நிரப்புவதாலும்; அ-புனைவுகள் கொண்டுள்ள சீரான தருக்கப்பார்வையாலும் வலுவான தனித்த இடங்களை நிறுவிக்கொண்டவை. ஒரு குறுநாவல் சில சிறுகதைகதைகள் எழுதியுள்ள அ. பாண்டியனின் கட்டுரைகள் பலவும் மலேசிய…

லதா: சிங்கையின் தனித்துவ படைப்பாளி

லதாவை  முதலில் அறிந்தது ‘சீனலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத்தான். தமிழ் இலக்கிய விமர்சகர்களின் பார்வையில் அந்தத் தொகுப்பே இதுவரை வந்த அவரது நூல்களில் பிரதானமானது என அறிந்தபோது அவரை அணுகிச் செல்ல அது எனக்கான நல்ல தொடக்கம் என்றே தோன்றியது. லதா என சுருக்கமாக அறியப்படும் கனகலதா என்பவர் சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர்,…

அழகுநிலா: சிங்கையில் வேர்பிடிக்கும் எழுத்தாளர்

பதியம் போடப்பட்டச் செடிகள் வேகமாய் வளர்கின்றன என்கிறார்கள். அது உண்மையா அல்லது பிரமையா என்பது தெரியாது. ஆனால் தமது தாய் வேர்களைத் தமிழகத்தில் விட்டுவிட்டுச் சிங்கை வந்து பதியம் பிடிக்கும் எழுத்தாளர்கள் ஊக்கமாகத்தான் இருக்கிறார்கள். கோவில் உண்டியலில் போட்ட காசு போல தமிழகத்தில் ஆயிரத்தில் ஒன்றாய் கலந்து காணாமல் போகும் அபாயம் இல்லாமல் சிங்கையில் படைப்பாளர்களின்…

அருண்மொழி நங்கை : பயணிக்கும் பாதையை பதியமிட்டவர்

அருண்மொழி நங்கை என்ற பெயரை ஜெயமோகனுடன் இணைத்தே பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். அவரும்கூட அவ்வாறுதான் தன்னை அறிந்துவைத்திருக்கக் கூடும். அருண்மொழி நங்கை எழுத்தாளர் ஜெயமோகனை 1991 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரின் பிரதான ரசனையும் இலக்கியமாக இருந்தது. அருண்மொழிநங்கை தன் கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர். கல்லூரி…

டத்தோ ரஹ்மான் பின் ஷாரி: மலேசியாவின் 15-ஆவது தேசிய இலக்கியவாதி

‘தேசிய இலக்கியவாதி’ எனும் விருதானது, மலேசியாவில் மலாய் மொழி இலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருது 1981-ஆம் ஆண்டில், மலேசியாவின் மூன்றாவது பிரதமரான துன் உசேன் ஓன் அவர்களின் அறிவுரையின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்டதாகும். 1981 தொடங்கி மொத்தம் 15 மலாய் மொழி இலக்கியவாதிகளுக்கு இதுவரையிலும் மலேசியாவின் ‘தேசிய இலக்கியவாதி’ எனும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.…

பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

1 “கொஞ்சம் சத்தமாகத் தான் பேச வேண்டியிருந்தது. அவள் மதிலுக்கு அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம்.” சிறைசாலையில் ஒரு மதிலின் ஓரத்தில் உள்ள அறையில் கதாநாயகனை அடைக்கின்றனர். நாயகன் அறையும் மதிலும் தான் இருக்கின்றன. மதிலுக்கு அந்தப் பக்கம் பெண்களின் சிறை. நாயகன் ராஜ துரோகம் செய்ததால் சிறையில் வைக்கப்பட்டுள்ளான். ராஜியத்திற்கு எதிராக எழுதியது…

ஜி.எஸ்.எஸ்.வி நவின் அறிமுகம்

ஒரு பண்பாட்டுச் சூழலில் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு என்பது அவருடைய தனிப்பட்ட செயல்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவரது பங்களிப்பு அவரது மாணவர்களின் செயல்களாலும் சேர்ந்தே மதிப்பிடப்படுகிறது. அவ்வகையில் தமிழில் ஒரு பெரு நிகழ்வென நம்முன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு என்பது அவர் தனிப்பட்ட முறையில் ஆற்றிய பெருஞ்செயல்கள் மட்டுமின்றி அவர்…

அரவின் குமார் படைப்புலகம்

மலேசிய தமிழ் இலக்கியச் சூழல் என்பது 50-களில் தொடங்கப்பட்டு இன்றைய நிலையிலும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டடைந்து கொண்டு வருகின்றது. பாலபாஸ்கரன், சை. பீர்முகம்மது, ம. நவீன் போன்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும்போது மலேசியாவில் தனித்துவமான இலக்கியம் உருவாக வேண்டும் எனும் எண்ணம் விதைபட்டு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து வந்த தலைமுறையால்தான் 70களில் நவீன இலக்கியத்தின்…

கோ. புண்ணியவான் : காலங்களுள் தக்கவைத்த கலைஞன்

மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு. அப்பேச்சுகள் அனைத்தும் எழுந்த வேகத்திலே உடனடியாக அடங்கிவிடும். மலேசியத் தமிழ் இலக்கியம் எனும் தனித்த அடையாளத்தைக் கண்டடையும் முயற்சி தொடங்கிய காலத்திலிருந்தே, மலேசிய தமிழ் இயக்கவாதிகளும் இலக்கியவாதிகளும் தங்களின் அடையாளத்தை இம்மண்ணில் விதைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். சஞ்சிக்கூலிகளாகப் வந்த…

எழுத்தாளர் கணேஷ் பாபு அறிமுகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கணேஷ் பாபு. செப்பேட்டுக்குப் புகழ்பெற்ற சின்னமனூர்,  சி.சு. செல்லப்பாவின் ஊரும் கூட. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, சிங்கப்பூருக்கு 2008ஆம் ஆண்டு குடிபெயர்ந்து, கடந்த பதினான்கு ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக வசித்து வருகிறார். எண்ணெய் மற்றும் எரிவாயுத்…