
கிளப்புகள் சில கூடி நடத்தும் மயானம் அது. ஊருக்கு மையத்தில் பழைய பேருந்து நிலையம் பின்புறத்திலேயே அந்த மின்தகனமயானம் அமைந்திருக்கும் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பது முதல் பார்வையில் தெரியா வண்ணம், எட்டு அடி உயர மென் நீல வண்ண காம்புண்டு சுவர். உள்ளே அதை ஒட்டி வளர்க்கப்பட்ட பொன் கொன்றை…