
சிறுகதை என்பது ஒரு கலை வடிவம். அதன் எளிமையும் வாசிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் பலரையும் அதன்பால் ஈர்க்கிறது. இச்சூழலில் மொழியால் ஆன அக்கலை வடிவத்தை முழுமையாகச் சென்றடைகிறோமா என்பது புதிய வாசகர்களிடம் எப்போதும் உள்ள பிரதானமான கேள்வி. சிறுகதை வாசிப்பு என்பது அதனுள் பூடகமாகச் சொல்லப்படும் கருத்தை உருவி எடுத்து ஒப்புவிப்பதாகவே மலேசியாவில் பழக்கமாகிவிட்ட சூழலில்…