பசுமை இல்லம்

இந்தச் சிறிய நிறுவனத்தின் மேல் தளத்தில், இடமோ வலமோ சன்னல்கள் இல்லாத சுவரை ஒட்டி வளைந்து செல்லும் பதினைந்து படிகளில் ஏறிச் சென்றால் சாம்பல் நிற கதவின் முன் சென்று நிறுத்தும்.  அந்தக் கதவைத் திறந்து சென்றால், சட்டென நிறுவனத்தின் பரபரப்புகளிலிருந்தும், பெருநகரின் கூச்சல் குழப்பங்களிலிருந்தும் வெகுதூரம் விளகியிருக்கும்   அகண்ட மொட்டை மாடி, எங்களை இன்னொரு…

படகு

சில நாட்களாகவே நான் மிகாலை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அறை சுவரில் மாட்டியுள்ள சீன லூனார் நாள்காட்டி தாள்களை ஒவ்வொரு முறையும் நான் கிழித்ததை வைத்துப் பார்த்தால் ஏறக்குறைய 2 மாதங்களாக என்னுடைய பார்வை முழுவதும் மிகால் மேல்தான் பதிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாள்காட்டி தாள்களின் எண்ணிக்கை குறைய குறைய நான் மிகாலை நேருக்கு நேர்…

அவனை எனக்குத் தெரியும்

தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில்…

மண்கதை

கனத்த மூச்சுடன், அம்மா இனி இல்லை என்பதைத் தம்பி என்னிடம் சொன்னான்.1 நானும் தம்பியும் தாத்தாவின் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் குடிசையின் நிழல் நீளமாக விழும் மாலை நேரம் வரை எங்களை மறந்து மண்ணில்2 ஆர்வமாக விளையாடிய நாட்கள் இன்றும் நினைவிருக்கிறது.  நானும் தம்பியும் உள்ளே படுத்திருந்த தாத்தாவை முற்றிலும் கவனிக்கவில்லை. தாத்தாவுக்கு அடிக்கடி…

சாதகம்

கட்டிலில் பாதி அளவே இருந்தாள். சுருக்கங்களை நீவி விட்டால் நீண்டு விடுவாளோ என்று தோன்றியது. ”நல்லாக்றீங்களா?” என்றதற்கு, எங்கோ பார்த்து ”ஆங் நல்லத்தான இருக்குறேன் போ” என்று சிரித்தாள். பொன்னாத்தா கிழவிக்கு வயது தொன்னூற்று ஒன்று. நடமாடிக்கொண்டுதான் இருக்கிறாள். அம்மா என்னிடம் கூறிய கணக்குப் படி பார்த்தால் எந்தத் தடையமும் தெரியவில்லை. நான் ஊருக்கு வந்து…

கூத்தன் மலை

1 மலைச்சரிவில் ஒரு மின்மினி பேருவகையும் பெருமழையும் அருகிவிட்டிருந்த அந்த வறண்ட நிலம் அன்று விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒருவார காலமாய் களைகட்டிய கட்டுங்கடங்காத கொண்டாட்டங்களும் கொந்தளிப்புகளும் உச்சம் ஒன்றை எட்டிவிடும் மும்முரத்தில் இருந்தது. ஏழாம் நாளான அன்றைய இரவில் நடக்கவிருந்தது மிக முக்கியமான இணைவு. ஊரின் முதன்மை வீரன் என அறிவிக்கப்பட்டு, ஒரு வருடகாலமாய் போற்றப்பட்டு…

நிலத்தைச் சுமந்தலைபவரின் கதைகள்

‘எம் நிலத்துக்கான, எம் வளத்துக்கான, எம் ஆநிரைகளுக்குத் தேவையான அரசியலில் இருந்து என் எழுத்துத் தொடங்குகிறது,’ என்று வெற்றிச்செல்வன் இராசேந்திரன் குறிப்பிட்டாலும், அவர் எழுத்துகள் அரசியல் சீற்றமற்றவை. கழிவிரக்கம் கொள்ளாதவை. காடு மேடுகளையும் வெய்யில் மழையையும் இலகுவாகக் கடந்து செல்லும் இடையர்களின் வாழ்க்கைபோலவே அவரது எழுத்தும் இலகுவானது. காட்டாற்றின் போக்கிலே ஓடிக்கொண்டிருந்தாலும் கரையொதுங்கும் தருணத்திற்காக அலட்டிக்கொள்ளாது…

நான்காவது கொலை

‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய…

தெலுங்கு நாட்டுபுறக் கதைகளை

ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, ​வெள்ளையாகக் கோழி முட்டை ஒன்று பளபளனு மின்னுவதைக் கண்டாள். கிழவி அதை எடுத்து வந்து அடை போடலாம் என்று அடுப்பில் வைத்தாள். தோசைக்கல்…

புதுமைப்பித்தனின் பசித்த மனிதர்கள்

பசித்திருக்கும் மனிதனை அகக்கண்கொண்டே பார்த்துணரமுடியும். எல்லா சாமான்ய மனிதர்களுக்கும் இந்த அகப்பார்வை அமைவதில்லை. பசியால் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பசியோடு இருக்கும் சக மனிதனைக் கண்டுணரும் நுண்ணியம் வாய்க்கும். கருணை உள்ளங்கொண்டவர்களாலும் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும்.  இவர்களில் துல்லிதமாய் உணர்பவன் படைப்பாளன் மட்டுமே. ஏனெனில் அவன் தன்னைச் சுற்றிவாழும் சமூகத்திடமிருந்தே கதையை உருவி எடுக்குகிறான். மனிதர்களின்…

வல்லினம் முகாம் 2025

முதல் பகுதி: சிறுகதையின் வரலாறு சாலினி வருடந்தோறும் வல்லினம் விருது விழாவுக்கு முன் நடத்தப்படும் வல்லினம் முகாமில் 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வந்திருக்கிறேன். இம்முறையும் 21 டிசம்பர் முதல் 22 டிசம்பர் என 2 நாட்களுக்கு  எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வழிநடத்தப்பட்ட வல்லினம் இலக்கிய முகாமில் கலந்துகொண்டேன். இதற்கு முன்…

கௌசல்யா கவிதைகள்

ஒரு நல்ல மரணத்தை வேண்டுகின்ற நாளில் சாத்தான் கொஞ்சம் மனமிறங்கியிருக்கலாம்.அன்பற்று வறண்டு கிடக்கும் சரீரத்தில் ஒரு தேநீரை நிரப்பி பிழைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. *** எனக்கு உன் குறைகள் உறைக்கிறது அப்படியானால் நான் உன்னை இழக்க தயாராகி கொண்டிருக்கிறேன். நான் அன்பின் கரங்களை ஏந்தியபோது எந்த வெறுப்பையெல்லாம் என்மீது உமிழ்ந்தாயோ அதையெல்லாம் திரும்பச்செய் நான்…

பெருமாள்முருகனின் படைப்புலகம் (உரையாடல் பதிவு)

“காலங்காலமாகப் பெருமை பெற்று நிலைத்திருக்கும் ஒரு மதமும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் சாதியும் ஒரு  எளியவனின் எழுத்துக்களால் சிதறுண்டு போகும் என்றால் அந்த மதத்தின் அடிப்படையையும் அந்தச் சாதி அமைப்பின் கட்டுமானத்தையும் காலம் உலுக்கி வீழ்த்தும்.” மாதொருபாகன் சர்ச்சையின் போது கவிஞர் சுகுமாரன் எழுதிய ‘எழுத்தை யார் ஆள்வது?’ எனும் கட்டுரையின்  உள்ளடக்கத்தை வைத்து பெருமாள்…